இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் சுமார் 50 சதவீத சந்தையைத் தன்னகத்தில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோ மோட்டோகார்ப் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 10 வருடத்தில் யாரும் அறிவிக்காத ஒரு மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துப் புதிய யுகத்தைப் படைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது இந்தியாவின் ஹீரோ. 10,000 கோடி ரூபாய் ஹீரோ மோட்டோ கார்ப் இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 வருடத்தில் சுமார் 10000 கோடி ரூபாய் நிதியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொகை முழுவதும் புதிய அல்லது மாற்றுப் போக்குவரத்து முறையை உருவாக்குவதற்காகச் செலவிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த 10000 கோடி ரூபாய் மூலம் ஆராய்ச்சி மற்றும் மாற்று போக்குவரத்து முறை வளர்ச்சி பயன்படுத்த உள்ளது. திட்டம் அதுமட்டும் அல்லாமல் இந்த 10,000 கோடி ரூபாய் நிதியை நிலையான உற்பத்தி தளம், வர்த்தகக் கிளைகள் விரிவாக்கம் மற்றும் உலகம் முழுவதும் பிரான்ட் பில்டிங் ஆகியவற்றும் பயன்படுத்த உள்ளதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் வாகனம் இனியும் எலக்ட்ரிக் வாகனத்தின் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது. இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் ஹீரோ ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு உயர உள்ளது. இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கும் ஹீரோவின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது எனப் பவன் முஞ்சால் கூறினார். ஜெர்மனி இந்தியாலில் அமைக்கப்படும் R&D போலவே ஜெர்மனியிலும் ஒரு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியா, இந்தோனேஷியா போன்ற வளரும் நாடுகளை விடவும் வல்லரசு நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களுக்குச் சந்தை மிகப்பெரியதாக உள்ளது. எனவே தான் மேற்கத்திய நாடுகளின் சந்தையை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஜெர்மனில் புதிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட உள்ளது எனப் பவன் முஞ்சால் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக