ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.129-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 14நாட்கள் வேலிடிட்டி உடன் வெளிவந்தது. தற்சமயம் இந்த திட்டம் திருத்தப்பட்டு 24நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வெளிவருகிறது. மேலும் திருத்தப்பட்ட
ரூ.129-ரீசார்ஜ் திட்டம் தற்போது டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் மும்பை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் கிடைக்கிறது
ரூ.129-ப்ரீபெய்ட் நன்மைகள்
ரூ.129-ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசுகையில், 300எஸ்எம்எஸ், 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் என பல்வேறு சலுகைகள் இவற்றில் உள்ளது. மேலும் ணுநுநு5 சந்தாவை வழங்கும் வோடபோன் பிளே பயன்பாட்டிற்கான இலவச அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது. மேலும் வோடபோன் நிறுவனம் இதற்முன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.
ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோனின் ரூ.449-திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது,பின்பு தேசிய ரோமிங் நன்மையையும் வழங்குகிறது. அதன்படி எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பை இந்த பேக் வழங்குகிறது. வோடபோன் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் நன்மைகள் ஆனது ZEE5 மெம்பர்ஷிப் உடன் வோடபோன் ப்ளே சந்தாவையும் வழங்குகிறது.
குறிப்பாக இந்த திட்டம் பெரும்பாலா வட்டங்களில் 70நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருக்க, பீகார் போன்ற சில வட்டங்களில் 60நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. அதன்படி இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும் என டெலிகாம் டாக் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வோடபோனின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டத்தின் திருத்தம் என்ன?
வோடபோன் நிறுவனத்தின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டம் திருத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இப்போது 77நாட்கள் என்ற வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இதற்குமுன்பு வெறும் 70நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது என்பது குறிப்படத்தக்கது. வோடபோன் நிறுவனத்தின் ரூ.555-திட்டத்தின் நன்மைகள் பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி அளவிலான, டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100எஸ்எம்,வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தா போன்றவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் 649திட்டம் நிறுத்தப்பட்டது
அன்மையில் வோடபோன் நிறுவனம் தனது 649 ஐபோன் ஃபாரெவர் போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்தியது. குறிப்பாக இந்த 649 ஐபோன் ஃபாரெவர் திட்டம் வரம்பற்ற அழைப்பு, 90ஜிபி டேட்டா, 200ஜிபி வரை டேட்டா ரோலிங் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கியது. இதுதவிர ரூ.999மதிப்புள்ள இலவச அமேசான் ப்ரைம் சந்தா, ஒரு வருடத்திற்கான வோடபோன் ப்ளே மெம்பர்ஷிப், மொபைல் ஷீல்ட் மற்றும் ZEE5 பிரீமியம் சந்தா ஆகிய சலுகைகளை வழங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக