டாடா ஸ்கை நிறுவனம் அதன் மினிமம் ரீசார்ஜ் விலையை 150% உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது இனிமேல் ரூ.20 ரீசார்ஜ் எல்லாம் கிடைக்காது என்று அர்த்தம்; வேறு என்ன கிடைக்கும்?
டாடா
ஸ்கை நிறுவனம் தற்போதுள்ள குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அதாவது டாடா ஸ்கை பயனர்கள், பிப்ரவரி 11 முதல் ரூ.50 க்கும் குறைவான தொகையுடன் தங்கள்
அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், டாடா ஸ்கை சந்தாதாரர்கள் இனிமேல் குறைந்தபட்சம் ரூ.50 மதிப்பிலான பேக் கொண்டே தங்களின் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கையின் வழியாக, ஏற்கனவே ரூ.50 மற்றும் அதற்கு மேலான மினிமம் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ள ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி 2 எச் சேவையுடன் டாடா ஸ்கை நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த இடட்ஜ்ஜில், டிஷ் டிவி சந்தாதாரர்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பு ரூ.10 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு சார்ந்த இந்த தகவலை டாடா ஸ்கை நிறுவனத்தின் பிரதிநிதியான ஃபிர்டோஸ் பாத்திமா கூறியதாக ட்ரீம் டி.டி.எச் தெரிவித்துள்ளது.
“எங்கள் பிளாட்பார்மில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் குறைந்தபட்ச தொகையை ரூ.20 இலிருந்து ரூ.50 ஆக மாற்றுகிறோம். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் டாடா ஸ்கை இயங்குதளங்களின் வழியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு ஆப் வழியாகவோ ரூ.50 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் அனுமதிக்கப்படாது / வெற்றிகரமாக இருக்காது."
" ஒருவேளை சந்தாதார் ரூ.50 க்கு குறைவான ரீசார்ஜை செய்ய முயற்சித்தால், இந்த சமீபத்திய நடவடிக்கை சார்ந்த மெசேஜ் அவரது ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இனிமேல் ரீசார்ஜ் செய்யப்படாது."
இப்போது ஆபரேட்டர் குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பை 150% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் இந்த மாற்றம் குறித்து டாடா ஸ்கை நிறுவனம் தனது சந்தாதாரர்கள் அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூ.20 ஆக இருந்தது, ஆனால் இது பிப்ரவரி 11 முதல் ரூ.50 ஆக உயர்த்தப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக