Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 பிப்ரவரி, 2020

செருப்புல வைத்த டுவிஸ்ட்: இனி பெண்கள் கிட்ட நெருங்கனாலே ஷாக்., அலாரம் அடிக்கும்.,இது எப்படி இருக்கு


600-க்கும் மேற்பட்ட கருவிகள்
ஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சில மாணவிகளும் இணைந்து பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடிய வகையிலான காலணி ஒன்றை தயாரித்துள்ளனர்.
600-க்கும் மேற்பட்ட கருவிகள்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அமிர்த கணேஷ் என்ற இளைஞர் பி.இ(எலக்ட்ரானிக் கம்யூனிகேசன்) படித்து வருகிறார். இவர் விவசாயம், ராணுவம், மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது ஏற்படும் விஷவாயு தாக்குதல் உயிரிழப்புகளைத் தடுக்கும் கருவி உட்பட 600-க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.
பாதுகாக்கக்கூடிய வகையில் சிறிய அளவிலான கருவி
இந்த நிலையில் தற்போது மூன்று கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து அவர்களைக் பாதுகாக்கக்கூடிய வகையில் சிறிய அளவிலான கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
தனியே நடந்து செல்லும் பெண்கள்
தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகைப் பறிப்பு போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதேபோல் பொதுவெளியில் இன்றைக்கு பெண்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அத்துடன் பாலியல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
வயர்லெஸ் ரிசீவர், சிறிய அளவிலான பேட்டரி, எலக்ட்ரோடு
இதை தடுக்கும் வகையில் வயர்லெஸ் ரிசீவர், சிறிய அளவிலான பேட்டரி, எலக்ட்ரோடு ஆகியவற்றைக் கொண்டு சிறிய அளவில் புதிய கருவி ஒன்றை உருவாக்கி அதைக் காலணியின் அடிப்பகுதியில் பொருத்தியுள்ளனர்.
பெண்களுக்குப் பெருமளவில் உதவியாக இருக்கும்
இந்தக் காலணிகளை அணிந்துகொண்டு வெளியே செல்லும் பெண்களுக்குப் பெருமளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த வகையான செருப்பை அணிந்து கொண்டு செல்லும் பெண்களை யாரேனும் வேண்டாத நபர்கள் தொட்டாலோ அல்லது தூக்கினாலோ, நகைப் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ அந்தப் பெண்ணின் உடலில் ஏற்படும் வேகத்தினால் செருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி உடனடியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
100 மீட்டர் தூரம் வரை கேட்கும் அலாரம்
அதுமட்டுமின்றி செருப்பிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை கேட்கும் வகையிலான எச்சரிக்கை அலாரம் அடிக்கும் வகையில் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் ஈடுபடும் எதிரியின் மேல் செருப்பை வைத்தால் அடிபாகத்திலிருந்து ஷாக் அடிக்கும் வகையில் இந்த செருப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஆபத்துக்கு உள்ளாகும் போதெல்லாம் கைகொடுக்கும்
இதன் மூலம் பெண்கள் ஆபத்துக்கு உள்ளாகும் போதெல்லாம், அவர்களாகவே தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அலார சத்தத்தைக் கேட்டு மற்றவர்கள் உதவியுடனும் தங்களை பாதுகாக்க முடியும். இந்த செருப்பில் உள்ள கருவிகளானது பேட்டரி மூலமாகவே செயல்படுத்தப்படுகின்றன.
அடிக்கடி சார்ஜ் போடப்பட வேண்டிய அவசியம் இல்லை
மேலும் இந்த பேட்டிக்கு அடிக்கடி சார்ஜ் போடப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதில் மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால் நடக்க நடக்க அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். குறிப்பாக இந்த கருவியை காலணியில் மட்டுமின்றி செல்போன், வாட்ச் போன்ற பொருட்களிலும் பயன்படுத்தலாம். சமயத்தில் வாட்ச், செல்போன் மறந்து செல்வதற்கோ அல்லது ஆபத்தின் போது எடுப்பதற்கோ சிரமமாக இருக்கலாம்.
செருப்பு இயல்பாகவே காலில் அணிந்து கொள்ளலாம்
ஆனால் செருப்பு இயல்பாகவே காலில் அணிந்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் போது செருப்பை எளிதாக கழட்டி விடலாம். இந்த காலணி குறித்து காலணி தயாரித்த குழுவில் இருந்த ஒரு பெண் தெரிவிக்கையில் எங்கள் கல்லூரிக்கு இரண்டு டாஸ்மாக் கடைகளைத் தாண்டித்தான் வர வேண்டிய நிலை உள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில்
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள இந்த டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கும் குடிமகன்கள், சாலைகளில் அமர்ந்து குடிப்பதும் சண்டையிட்டுக் கொள்வதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதனால் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று ஒருவித அச்சத்துடனேயே கல்லூரிக்குச் செல்ல வேண்டி நிலை இருந்து வருகிறது.
அமிர்த கணேஷிடம் எடுத்து கூறினோம்
இதுகுறித்து அமிர்த கணேஷிடம் எடுத்து கூறினோம். அதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட செருப்புதான் இது. மேலும் இதை தயாரிக்கும் குழுவில் எங்களையும் இணைத்துக்கொண்டார். தற்போது இதை அணிந்துகொண்டு கல்லூரிக்குச் செல்ல இருக்கிறோம். இது ஒரு தொடக்கம் என்பதால் 5 ஜோடி செருப்புகளை மட்டுமே வாங்கி, அதன் அடிப்பகுதியில் கருவியைப் பொருத்தியுள்ளோம் என்றார்.
நமது பாதுகாப்பை நாம் எப்போதும் உறுதி செய்து கொள்வது நல்லது இப்படி செருப்பை அணிந்த படி கல்லூரிக்கு வரும் பெண்களிடம் யார் முதலில் சேம்பில் பீஷாக சிக்க போகிறார் என்று தெரியவில்லை. பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்து வந்தாலும், நமது பாதுகாப்பை நாம் எப்போதும் உறுதி செய்து கொள்வது நல்லது. அனைத்து செயல்களிலும் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக