உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும்
கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இந்த வைரஸை
முதலில் கண்டறிந்த டாக்டர் லி அதே வைரஸ் ஏற்பட்டு பலியானது, மக்கள் மத்தியில்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய,
இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட
நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த
வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது.
இந்நிலையில்,
சீனாவில் கொவிட்-19 வைரசால் நேற்று (வெள்ளிக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை
1,523-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66,492 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நேற்று மட்டும் 143 பேர் ஒரே
நாளில் பலியாகியுள்ளனர்.
அதுமட்டுமல்ல புதிதாக 2,641 பேருக்கு இந்த வைரஸ்
தாக்கிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த எண்ணிக்கை இன்னும்
அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும் 11,053 நோயாளிகள் மோசமான நிலையில்
உள்ளனர் என்றும், 8,096 பேருக்கு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து
வெளியேற்றப்பட்டனர் என தகவல் வந்துள்ளது.
இதனிடையே,
கொரோனா (கொவிட்-19) வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையில் பக்க பலமாக
இருந்து வந்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள், அது மட்டுமல்ல
மேலும் 1,716 சுகாதார ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி
இருக்கிறது. அதில், 1,102 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள், 400 பேர் ஹூபெய்
மாகாணத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்ற தகவலை தேசிய சுகாதார ஆணையத்தின் துணை
மந்திரி ஜெங் யிக்சின் வெளியிட்டுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக