Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 பிப்ரவரி, 2020

ஏடிஎம்களில் இனி 2000 ரூபாய் நோட்டு கிடையாது? – வங்கிகள் முடிவு!

 money
 த்திய அரசால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஏடிஎம் எந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டை நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2016ம் ஆண்டில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நீக்கம் செய்ததை தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. தொடர்ந்து 500, 100, 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளும் புதிய வடிவில் புழக்கத்திற்கு வந்தன. ஆரம்பத்தில் மற்ற ரூபாய் நோட்டுகள் அதிகளவில் அச்சிடப்படாமல் இருந்ததால் 2000 ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இருந்தன.

நாளடைவில் தற்போது அனைத்து ரூபாய் நோட்டுகளும் தேவையான அளவு இருப்பதால் இந்தியாவின் உயர்மதிப்புடையதான 2000 ரூபாய் நோட்டின் புழக்கத்தை குறைக்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் புதியதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ள நிலையில் வங்கிகளிலும் ஏடிஎம் எந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறும் அம்சத்தை நீக்கி விட்டு 500,200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை நிரப்ப இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 2000 ரூபாய் பயன்பாடு இருக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக