Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 பிப்ரவரி, 2020

21 வயது பெண்களுக்கு 2 லட்ச ரூபாய்! – தமிழக அரசு அறிவிப்பு!

Jayalalitha

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட் தாக்கலுக்காக பிப்ரவரி 14ம் தேதி முதல் தமிழக சட்டசபை கூடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி ஆண்டுதோறும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகள் 21 வயது பூர்த்தியடையும்போது 2 லட்ச ரூபாய் நிதியுதவி பெற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இல்லாமல் வளர்ப்பு பெற்றோரின் கவனிப்பில் வளரும் பெண்களுக்கு 4 ஆயிரம் நிதியுதவியும் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வியை சரிசமமாக பேணும் மாவட்டங்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக