Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 13 பிப்ரவரி, 2020

மக்கள் பெரும் அச்சம்!! ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு!!

 மக்கள் பெரும் அச்சம்!! ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு!!



சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. 
இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர். 
கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 1,113 பேரும், ஹாங்காங் மற்றும் பில்ப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிப்பிற்கு ஹூபேய் மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஒரே நாளில் வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!