Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி!

 
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் 2020 நியூ இயர் திட்டத்தை அறிமுகம் செய்தது, ரூ.2020 என்கிற மதிப்பை கொண்ட அந்த திட்டம் முன்னதாக ரீசார்ஜ் செய்யக்கிடைத்த ரூ.2199 திட்டத்தின் விலைக்குறைக்கப்பட்ட சலுகை ஆகும். தற்போது ஜியோவின் ரூ.2020 திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய திட்டம் ஒன்றை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? நன்மைகள் என்ன? வேலிடிட்டி என்ன? என்பதை பற்றி விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

என்ன விலை?

2020 புத்தாண்டு சலுகையின் ஒரு பகுதியாக, ஜியோ அதன் ரூ 2,199 எனும் ஆண்டு திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெறும் ரூ.2020 க்கு வழங்கியது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ ரூ.2020 (அசல் விலை ரூ.2199) ஆண்டு திட்டத்தை முழுவதுமாக நீக்கி, அதன் புதிய நீண்ட கால ரீசார்ஜ் திட்டமான ரூ.2,121 ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ vs ஏர்டெல் vs வோடாபோன் ஐடியா
ப்ரீபெய்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ எப்போதும் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட முன்னிலையில் இருக்கிறது. இப்போது, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதன் அனைத்து வட்டங்களிலும் முறையே ரூ.2,398 மற்றும் ரூ.2,399 என்கிற ஆண்டு திட்டங்களை வழங்குகின்றன. விலை நிர்ணயத்தில் ஜியோ நேரடியான வெற்றியை அடைந்தாலும் கூட, இரண்டு பழமையான டெலிகாம் நிறுவனங்கள் வரம்பற்ற ஆஃப்-நெட் குரல் அழைப்பு நன்மையில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் அனைத்து ஜியோ திட்டங்களும் ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு FUP வரம்புடன் வருகின்றன. இந்த நிலை புதியரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும்.
டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் பற்றி?
நன்மைகளை பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ரூ.2,121 என்னு நீண்ட கால திட்டமானது வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான அதிவேக தரவு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
வேலிடிட்டி மற்றும் FUP இணைய வேகம் பற்றி?
செல்லுபடியை பொறுத்தவரை, புதிய ஜியோ ரூ.2,121 பிளான் ஆனது 336 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டுள்ளது. ஆக இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் பெறும் மொத்த டேட்டா நன்மையின் அளவு 504 ஜிபி ஆகும். தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின்னர், இணைய வேகமானது 64 Kbps என்று குறைக்கப்படும். இது வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற சமூக ஊடக பயன்பாடுகளின் வழியாக மெசேஜ்களை அனுப்புவதற்கு போதுமானதாக இருக்கும்.
கூடுதல் நன்மைகள் பற்றி?
வழக்கம் போல், இந்த திட்டமும் ஜியோவின் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. அதாவது JioTV மற்றும் JioCinema போன்ற ஆப்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. ஜியோ டிவி தற்போது 650 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் லைவ் டிவி ஆப் ஆகும். அதேசமயம் ஜியோசினிமா ஆப் ஆனது நிறுவனத்தின் விஓடி (வீடியோ ஆன் டிமாண்ட்) சேவையாகும், இது சன்என்எக்ஸ்டி மற்றும் ஜியோவின் சொந்த லைப்ரரி ஆப்களில் உள்ள கன்டென்ட்களை தன்வசம் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக