Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இது சோனியின் போன் என்பதையே நம்ப முடியவில்லை; இதுல ட்ரிபிள் கேமரா வேற!

சோனி நிறுவனம் புதிய Xperia மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் என்ன? அம்சங்கள் என்ன? விலை என்ன? போன்ற விவரங்கள் இதோ!
சோனி நிறுவனம் அதன் புதிய எக்ஸ்பீரியா மாடலை அறிமுகம் செய்துள்ளது. அது Sony Xperia L4 என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

முன்னதாக எக்ஸ்பீரியா 1 ஃபிளாக்ஷிப்பில் வழங்கப்பட்ட சோனியின் சொந்த மல்டி விண்டோ யுஐ இந்த ஸ்மார்ட்போனிலும் உள்ளது.
 
இது கடந்த ஆண்டு பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) நிகழ்வில் சோனி வெளியிட்ட எக்ஸ்பீரியா எல் 3 ஸ்மார்ட்போனின் வாரிசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தலை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய பேட்டரி மற்றும் பல்வேறு வடிவமைப்பு நிலை மாற்றங்களை பெற்றுள்ளது.

கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களுடன் அறிமுகமாகி உள்ள சோனி எக்ஸ்பீரியா எல் 4 ஆனது கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும். இருப்பினும், சோனி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை.

 
ஆனால் நிச்சயமாக சோனி எக்ஸ்பீரியா எல் 4 ஆனது அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது ஒரு புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிமுகமான சோனி எக்ஸ்பீரியா எல் 3 ஆனது சுமார் ரூ.15,500 என்கிற விலையுடன் விற்பனைக்கு வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

சோனி எக்ஸ்பீரியா எல் 4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சோனி எக்ஸ்பீரியா எல் 4 ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான நிறுவனத்தின் மல்டி விண்டோ யுஐ கொண்டு இயங்குகிறது.இது 21: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட 6.2 இன்ச் அளவிலான எச்டி+ (1680x720 பிக்சல்கள்) வைட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

 

இது ஆக்டா கோர் மீடியாடெக் MT6762 SoC ப்ராசஸர் உடனாக 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது.

கேமரத்துறையை பொறுத்தவரை, சோனி எக்ஸ்பீரியா எல் 4 அதன் ட்ரிபிள் கேமரா அமைப்பின் கீழ், 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 2.0) + 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா (எஃப் / 2.2) + 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை (எஃப் / 2.4) கேமராக்களை கொண்டுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, 8 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது, இது எஃப் / 2.0 லென்ஸை 78 டிகிரி பீல்ட் ஆப் வியூ-ஐ கொண்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எல் 4 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த மொத்த அமைப்பும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 3,580 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அளவீட்டில் சோனி எக்ஸ்பீரியா எல் 4 ஆனது 159x71x8.7 மிமீ மற்றும் 178 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக