Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்


  பிழை சரிசெய்யும் விதமான நடவடிக்கைகள்
டுவிட்டர் செயலி என்பது பிரதானமான சமூகவலைதள பக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் டுவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறீயீடானது உலகம் முழுக்க டுவிட்டரை ஆண்ட்ராய்டில் பயன்படுத்துபவர்களின் விவரங்களை கசிய செய்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
தீங்கு விளைவிக்கும் குறியீடு
டுவிட்டரில் ஏற்பட்டுள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடு குறித்தும் பாதுகாப்பு பிழை குறித்தும் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவரவர்கள் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தது.
ஹேக்கர்கள் உள்நுழைய வாய்ப்பு
இந்த தவறான குறியீட்டின் மூலம் ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் ஆகிய தனிநபர் குறித்து ஹேக்கர்கள் அக்கவுண்டுகளை ஹேக் செய்ய வழிவகை செய்யும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.
பிழை சரிசெய்யும் விதமான நடவடிக்கைகள்
அதேபோல் பிழை சரிசெய்யும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக டுவிட்டர் தெரிவித்தது. அதன்படியே, ஒவ்வொருவர் மின்னஞ்சலுக்கும்(மெயில் ஐடி) தனிதனியாக மெயில் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் மற்றொரு நடைமுறையும் தெரிவித்தது.
ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும்
ஹேக்கர்கள் ஊடுருவதாக வகையில், தங்களின் டுவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியது. இந்த பிழை டுவிட்டர் ஐ.ஒ.எஸ். செயலியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
புதிய புதிய அம்சங்கள்
டுவிட்டரில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி டிவிட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்க செய்யும் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் தற்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
போலி தகவல்களை தடுக்க நடவடிக்கை
இந்த நிலையில் பொதுவாக போலி தகவல்கள் தொடர்ந்து டுவிட்டர் தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அந்த போலி தகவல்களை பயனர்களே சுட்டிக்காட்டும் புதிய அம்சத்தினை அந்நிறுவனம் சோதனை செய்கிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் போலி தகவல்களை பிரகாசமான நிறங்களை கொண்டு சுட்டிக்காட்ட முடியும்.
போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சங்கள்
டுவிட்டர் மற்றும் இதர சமூக வலைதள நிறுவனங்கள் போலி தகவல்கள் மற்றும் செய்திகளை தங்களது தளங்களில் இருந்து நீக்க கடும் அழுத்தத்தை பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் இந்நிறுவனங்கள் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சங்களை தங்களது தளங்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
ஆபத்தை ஏற்படுத்தும் டுவிட்கள்
அதுமட்டுமின்றி ஆபத்தை ஏற்படுத்தும் தகவல்கள் மற்றும் மீடியா ஃபைல்கள் அடங்கிய டுவிட்களில் எச்சரிக்கை தகவல் இடம்பெற செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் இந்த முயற்சியின் சோதனை கட்டத்தை தொடர்ந்து செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக