Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

TikTok செய்த 'அந்த' காரியத்தால் பெற்றோர்கள் ஒரே குஷி! ஆனால், இளைஞர்கள் காட்டம்!


புதிதாக களமிறங்கிய ஃபேமிலி மோடு
டிக்டாக் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு இந்த செய்தி, ஒரு மோசமான செய்தியாக இருக்கும். இதற்கான காரணம் டிக்டாக் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு புதிய அம்சம் தான். குறிப்பாக இந்த செய்தி டிக்டாக் பயனர்களின் பெற்றோர்கள் காதில் விழுந்தால் உங்கள் நிலைமை சற்று கடினமானதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அப்படி என்ன மோசமான அம்சத்தை டிக்டாக் சேர்த்துள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
புதிதாக களமிறங்கிய ஃபேமிலி மோடு
டிக்டாக்கிற்கு அடிமையாக இருக்கும் பயனர்களுக்கு மோசமான செய்தி என்னவென்றால், டிக்டாக் நிறுவனம் புதிதாக ஃபேமிலி மோடு (Family Mode) என்ற புதிய குடும்ப பயன்முறை அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பற்றி உங்கள் பெற்றோருக்குத் தெரிந்திருந்தால் இனி நீங்கள் எவ்வளவு நேரம் டிக்டாக் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்து, உங்களை தொடர்ச்சியாக டிக்டாக் பயன்படுத்தாமல் தடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க புதிய அம்சம்
டிக்டாக் அறிமுகம் செய்துள்ள புதிய ஃபேமிலி மோடு உருவாக்கியதற்குக் காரணம் இதுதான், இது பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அனுமதிக்கும். அதேபோல், பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தை தினசரி என்ன அடிப்படையில், எவ்வளவு நேரம் டிக்டாக்-ல் செலவிட வேண்டும் என்பதற்கான வரம்புகளையும் நிர்ணயிக்க அனுமதிக்கிறது.
லைவ் மெசேஜ் (DM) முடக்கும் விருப்பமும் இருக்கு
அதேபோல், டிக்டாக் பயன்பாட்டில் உள்ள லைவ் மெசேஜ் (DM) விருப்பத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் விருப்பமும் அவர்களுக்கு இனி இந்த ஃபேமிலி மோடு வாயிலாக வழங்கப்படும் என்று டிக்டாக் அறிவித்துள்ளது. இத்துடன், டிக்டாக் பயன்பாட்டில் தங்கள் குழந்தைகள் எந்த வகையான உள்ளடக்கத்தைக் காணலாம் என்பதையும் நிர்வகிக்க முடியும் என்பதே கூடுதல் சோகம்.
அதிர்ஷ்டவசமாக எஸ்கேப் ஆன இந்தியர்கள்
அதிர்ஷ்டவசமாக இன்னும் இந்த அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை, ஆனால், டிக்டாக் நிறுவனம் முதற்கட்டமாக இங்கிலாந்தில் இந்த புதிய சேவையை அறிமுகம் செய்து வெளியிட்டுள்ளது. டிக்டாக் பயன்பாட்டில் இந்த புதிய அம்சத்தை மற்ற நாடுகள் எப்போது பெறும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக இந்த மாத இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் கூறிய காரணம் இதுதான்
"பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, எங்கள் பயனர்களின் நல்வாழ்வு எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது. டிக்டாக்கை மக்கள் வேடிக்கையாகப் பயன்படுத்தவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எங்கள் சமூகம் அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்வதும் முக்கியம், அதாவது ஆன்லைன் பயன்பாடுகள் மற்றும் சேவைகளுடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்க வேண்டும்" என்று டிக்டாக் கூறியுள்ளது.
குழந்தையின் நடவடிக்கையை கண்காணிக்கலாம்
இந்த அம்சத்தைப் பெற்றோர்கள் செயல்படுத்த, பெற்றோரின் டிக்டாக் கணக்கை அவர்களின் குழந்தையின் டிக்டாக் கணக்குடன் இணைக்க வேண்டும். ஏனென்றால் நிறையப் பெற்றோர்கள் டிக்டாக்கில் இருக்க மாட்டார்கள், இனி அவர்களின் குழந்தைகளின் நடவடிக்கையைக் கவனித்துக்கொள்ள டிக்டாக் பயன்படுத்த வேண்டியது இருக்கும். இனி டிக்டாக் இல் டீனேஜர்ஸ்-களுக்கு டூயட் வீடியோ செய்வது சிக்கல் தான்.
ஸ்கிரீன் டைம் மேனேஜ்மென்ட்
ஒவ்வொரு நாளும் தன் குழந்தைகள் எவ்வளவு நேரம் டிக்டாக்கில் செலவிட முடியும் என்பதைக் கட்டுப்படுத்த ஸ்கிரீன் டைம் மேனேஜ்மென்ட் விருப்பத்தை டிக்டாக் இப்பொழுது பெற்றோர்களுக்காக வழங்கியுள்ளது. டிக்டாக் பயன்பாட்டில் தங்கள் குழந்தைக்கு யார் நேரடி செய்திகளை அனுப்பலாம் மற்றும் யாருக்கு நேரடி செய்திகளை குழந்தைகள் அனுப்பலாம் என்பதையும் பெற்றோர்கள் கட்டுப்படுத்தலாம்
நம்பமுடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்த டிக்டாக்
கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஹூட்ஸூயிட்டின் டிஜிட்டல் 2020 அறிக்கையின்படி, டிக்டாக்கின் நம்பமுடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான டெய்லி யூசேஜ் பயனர்களைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2019 ஜனவரியில் 300 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக