தமிழக
காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும்.
அதில் ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற
வேண்டும். மேலும் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள டிஜிபிக்கள் , டிஐஜிக்களுக்கான
பதவி உயர்வு வழங்குவதற்கும் அனுமதி பெறவேண்டும்.
இதற்காக ஒவ்வொரு தகுதியிலும்
அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புவார்கள் அதன்படி இந்த ஆண்டு
ஐபிஎஸ் அதிகாரிகளில் தகுதியுடையவர்களின் பட்டியலை அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதையெடுத்து கூடுதல் எஸ்பி முதல் ஐஜிக்கள் வரை உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து தமிழக
அரசு சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த 14-ம் தேதி மத்திய உள்துறை
அமைச்சகம் அனுமதி வழங்கியது .பின்னர் கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சக
செயலாளர் தலைமையில் பதவி உயர்வு வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பதவி உயர்வு பெறும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் டேவிட்சன் தேவாசீர்வாதம்,
எஸ்.என்.சேஷசாயி, சந்தீப் மிட்டல், பால நாகதேவி ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி.க்களாக
பதவி உயர்வு பெற்றனர்.மேலும் கார்த்திகேயன், பவானீஸ்வரி, சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர்
கபில் குமார் சரட்கர், என்.கண்ணன், லோகநாதன், தேன்மொழி, ஜோஷி நிர்மல்குமார், சந்தோஷ்குமார்
ஆகிய 8 அதிகாரிகளுக்கு ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக