Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

ஜாக்கிரதை மக்களே.. வெறும் 6 ரூபாய்க்கு கூட GST வரி கேட்டு நோட்டிஸ்! கட்டலன்னா என்ன ஆகும்?


நிதிப் பற்றாக்குறை
டந்த 01 ஜூலை 2017 அன்று கோலாகலமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, இந்தியா முழுக்க அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த பின், இனி இந்தியா எப்படி முன்னேறப் போகுதுன்னு மட்டும் பாருங்க என்கிற ரீதியில் நாம் நிறைய செய்திகள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்க்க முடிந்தது.
ஆனால் இப்போது வரை ஜிஎஸ்டி அத்தனை சரியாக அமல்படுத்தப் படவில்லை என (IMF) சர்வதேச பன்னாட்டு நிதியமே சமீபத்தில் சொல்லியது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி எதார்த்தம்
எதார்த்தத்தில் ஜிஎஸ்டி, இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வர அரசு நிறையவே சிரமப்பட்டது. பல முறை வரி விகிதங்களைக் குறைத்தார்கள், இப்போதும் குறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்ற நாடுகளில் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு வரி வரம்புகள் என்றால், இந்தியாவில் சுமாராக 4 வரி விகிதம் + செஸ் + ரியல் எஸ்டேட் துறைக்கு தனி வரி விகிதம் என குழப்பங்களும் ஒரு பக்கம் நீடித்துக் கொண்டு இருக்கின்றன.
நிதிப் பற்றாக்குறை
மேலே சொன்ன ஜிஎஸ்டி குழப்பங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது மத்திய அரசுக்கு நிதி போதாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிக்க போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது ஜிஎஸ்டியின் வரி வசூலை அதிகரிக்க கடைசியில் ஒவ்வொரு ரூபாயையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வரி வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது.
46,000 கோடி ரூபாய்
வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள், குறிப்பிட்ட தேதிக்குப் பின் ஜிஎஸ்டி வரிப் படிவங்களைச் சமர்ப்பித்து இருந்தால், அவர்களிடம் இருந்து வட்டி வசூலிக்க வேண்டும். அப்படி தாமதமாக தங்கள் ஜிஎஸ்டி படிவங்களைச் சமர்பித்தவர்களிடம் இருந்து சுமாராக 46,000 கோடி ரூபாய் வட்டியை வசூலிக்க இருக்கிறார்களாம்.
நோட்டிஸ்
எப்படி இந்த 46,000 கோடி ரூபாயை வசூலிக்க இருக்கிறார்கள் என்று கேட்டால், நோட்டிஸ் அனுப்பி வருவதாகச் சொல்கிறார்கள். தாமதமாக தங்கள் ஜிஎஸ்டி படிவங்களைச் சமர்பித்ததற்கு, வெறும் இரண்டு ரூபாய், ஆறு ரூபாய் வட்டி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு கூட அசராமல் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.
உண்மை உதாரணம்
ஒரு தரகு நிறுவனத்துக்கு வந்த நோட்டிஸில் "நீங்கள் 2019 - 20 நிதி ஆண்டுக்குச் சமர்பிக்க வேண்டிய GSTR-3B படிவத்தை குறிப்பிட்ட தேதிக்குள் சமர்பிக்காமல் தாமதமாகச் சமர்பித்து இருக்கிறீர்கள். அதோடு தாமதமாக GSTR-3B சமர்பித்ததற்கு, CGST சட்டத்தின் கீழ் வட்டியை வேறு கணக்கிடவில்லை. எனவே உங்கள் வட்டித் தொகையான ஆறு ரூபாயை (5.9858630140000004) டெபாசிட் செய்யவும்" என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
நடவடிக்கைகள்
மேலே சொன்னது போல 14 தசம எண்கள் (Decimals) வரை வட்டியைக் கணக்கிட்டு, நோட்டிஸில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த வட்டித் தொகையைச் செலுத்தவில்லை என்றால், மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நோட்டிஸில் சொல்லி இருக்கிறார்களாம். வெறும் ஆறு ரூபாய்க்கு இவ்வளவு கோபம் தேவையா..? என்று தான் தெரியவில்லை.
ஆடிட்டர்கள் கருத்து
சில ஆடிட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இப்படி மிகச் சிறிய ரூபாய்க்கு எல்லாம் நோட்டிஸ் வந்திருப்பதை உறுதி செய்கிறார்கள். அதோடு, இப்படி மிகச் சிறிய தொகைகளுக்கு எல்லாம் நோட்டிஸ் அனுப்பினால் வியாபாரம் செய்பவர்கள் நேரம் ஒதுக்கி, வரித் துறையினர் கொடுத்திருக்கும் நோட்டிஸுக்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரியான நோட்டிஸ்களைத் தவிர்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக