Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

கைதி சுட்டுக் கொலை.!சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு.!

Breaking:கைதி சுட்டுக் கொலை.!சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு.!




ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் விசாரணைக் கைதியை காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கடந்த 2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர் காளிதாஸ். இவர் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது (24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் மீது திருட்டு புகார் வந்தது. இதையெடுத்து அவரை விசாரிக்க  செய்யது முகம்மதுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.
அவரிடம்  காளிதாஸ் விசாரணை நடத்தியபோது கத்தியால் கொலை செய்யும் நோக்கத்தில் செய்யது முகம்மது தாக்க வந்ததாகவும் அதனால் தன்னை தற்காத்து கொள்வதற்காக  துப்பாக்கியால் அவரை சுட்டதாகவும் கூறப்பட்டது. மார்பில் குண்டு பாய்ந்த செய்யது முகம்மது சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது இறந்தார்.
இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கொலை வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும் என செய்யது முகம்மது தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த வழக்கை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து  காளிதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர்  ஜாமீனில் வெளியே வந்த காளிதாஸ் பணியிடை நீக்கத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மீண்டும் பணியில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக்காப்பகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம்  ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை செய்யது முகம்மதுவின் தாயாரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையெடுத்து காளிதாஸ் இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக