கார் உலகின் கதாநாயகனான மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய
வரவாக எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.95 லட்சம் இருக்கலாம் என
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய
சி.என்.ஜி. மாடல் வி.எக்ஸ்.ஐ. வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. மாருதி
சுசுகி எர்டிகா நிறுவனத்தின் இரண்டாவது பி.எஸ்.6 சி.என்.ஜி. வாகனமாக இந்த கார்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாருதி சுசுகி ஆல்டோ காரின்
சி.என்.ஜி. வேரியண்ட்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.இதில்,
- புதிய சி.என்.ஜி. வேரியண்ட்களில் இ.சி.யு. மற்றும்
- இன்டெலிஜண்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
- புதிய எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த என்ஜின் பெட்ரோல் மோடில் 103 பி.ஹெச்.பி. பவர்,
- சி.என்.ஜி. மோடில் 91 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.
- இத்துடன் பெட்ரோல் மோடில் 138 என்.எம். டார்க் மற்றும் சி.என்.ஜி. மோடில் 122 என்.எம். டார்க் வழங்குகிறது.
- இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக