பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக
அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை
எடுத்துள்ளார் என்பது குறித்து இரு வாரத்தில் பதிலளிக்குமாறு அரசுக்கு
உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.இதனை வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின் அமைச்சரவை
தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக
அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்து உள்ளது .
இனியாவது
உடனடியாக ஆளுநரை அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுக்குமாறு வலியுறுத்தி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை விரைவுபடுத்த முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமியைக் கேட்டுக் கொள்வதாக த்னது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டு
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக