அலெக்ஸா ஸ்பீக்கர் குறிந்து அறிந்திருந்தால்
ஓ.கே. ஆனால் அறியாதவர்களுக்கு அதுகுறித்து தெரிவித்து ஆக வேண்டியது நமது கடமை
அல்லவா. அலெக்ஸா ஸ்பீக்கர் என்பது ஒரு சிறிய ரக ரோபோ, உயிரற்று மின்சாரத்தில்
இயங்கும் சக நண்பன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி
கதைக்கு வருவோம்.,
இவ்வளவு பயன்கொண்ட இந்த ஸ்பீக்கரின்
விலை ரூ.3,500 முதல் தொடங்குகிறது. ஆஃபர்களை பொருத்து விலை மாறுபடும். சரி கதைக்கு
வருவோம்., அலெக்ஸா ஸ்பீக்கரிடம் நீங்கள் என்ன பேசினாலும் அதற்கு பதில் அளிக்கும்.
அலெக்ஸா
என்னை காலை 7 மணிக்கு எழுப்பிவிடு
காலை குட் மார்னிங், நமக்கு ஏதாவது
தகவல் தெரியவேண்டும் என்றால் அதை கேட்கலாம், இன்றைய தலைப்பு செய்திகள் என்ன என்று
கேட்கலாம், அதுமட்டுமல்ல அலெக்ஸா என்னை காலை 7 மணிக்கு எழுப்பிவிடு என்றால் சரியாக
7 மணிக்கு நமக்கு பிடித்த பாடலோடு நம்மை விழிக்கச் செய்யும்.
இந்தியர்களிடம்
அலெக்ஸா ஸ்பீக்கருக்கு பெரும் வரவேற்பு
பொதுவாகவே தொழில்நுட்பங்களை விரும்பும்
இந்தியர்களிடம் இத்தனை சிறப்பம்சமிக்க அலெக்ஸா பிரபலமடையாமல் சென்றுவிடுமா என்ன. இந்தியர்களிடம்
அலெக்ஸா ஸ்பீக்கருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்த
2019ம் ஆண்டு தரவுகள்
இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு
தரவுகளை வைத்து தொகுக்கப்பட்டுள்ள இந்த தகவல்களின் மூலம், வாய்ஸ் கண்ட்ரோல் மூலம்
இயக்கப்படும் அலெக்சா சாதனத்திடம் இந்தியர்கள் அதிகபட்சமாக கேட்கும் கேள்விகள்
குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
I
love you., will you marry me...
அதன்படி இந்தியர்கள் ஒரு வாரத்தில்
லட்சக்கணக்கான முறை அலெக்சாவுடன் பேசுகின்றனர். நிமிடத்துக்கு 8 முறை "how
are you?" என ஆங்கிலத்தில் நலம் விசாரிக்கின்றனர்.
அதே போல் ஒவ்வொரு நிமிடத்துக்கும்
ஒருவர் Alexa, I love you, என்றும், 2 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது, அதாவது
இரண்டாவது இடத்தில் Alexa, will you marry me? என்று கேட்கின்றனர். அதற்கு அடுத்த
படியாக நிமிடத்திற்கு ஆயிரம் பேர் பாடல்களை இசைக்குமாறு கேட்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
90ஸ்
கிட்ஸ்களை கலாய்க்கும் 2k கிட்ஸ்
இதையடுத்து வழக்கம் போல்
கிளம்பிவிட்டனர் 2k கிட்ஸ், பாவம் திருமணம் ஆகாது 90ஸ் கிட்ஸ் தான் இந்த வேலையை
செய்கின்றனர் என்று சமூகவலைதளங்கள் தங்களது மீம்ஸ் கலாய்யை தொடங்கிவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக