மாணிக்கம் என்பவர் ஒரு பெரியவரிடம் ஐயா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்! என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு மாணிக்கம் மற்றவர்கள் எனக்கு துன்பம் கொடுக்கிறார்கள்! என்று கூறினார். உனக்கு துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்! என்று பெரியவர் கூறினார்.
அதற்கு மாணிக்கம் அப்படியா சொல்கிறீர்கள்? அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி? என்று மாணிக்கம் பெரியவரிடம் கேட்டார். அதற்கு அந்த பெரியவர் முதலில் உன் மனதைப் புரிந்து கொள்... அது போதும் என்றார். எப்படிப் புரிந்து கொள்வது? என்று அவர் கேட்டார்.
அதற்கு அந்த பெரியவர் ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்! என்று கதையை கூற ஆரம்பித்தார்.
ஒருவர் ஆசையாக ஒரு பூனையை வளர்த்து வந்தார். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.
இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை, வருந்தப்படவும் இல்லை.
அதற்கு உணவு வேண்டியதற்காக, எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆனது.
தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது அவர் இன்பமாக இருந்தார். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது வருத்தப்பட்டார். ஆனால் தனக்கு சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை! துன்பமுமில்லை! என்று கூறி பெரியவர் கதையை முடித்தார்.
இப்பொழுது மாணிக்கம் சிந்திக்கத் தொடங்கினார். துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது. மனதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை உணர்ந்து வாழ்ந்தான்.
தத்துவம் :
மற்றவர்கள் நமக்கு துன்பம் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு நாம் வருந்துவதைவிட, நம் மனதை புரிந்துக் கொண்டு வாழ்ந்தால் இன்பமாக வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக