Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

காதலனை நம்பிச் சென்ற மாணவி..! கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்.!

காதலனை நம்பிச் சென்ற மாணவி..! கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்.!




கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவனை கடந்த ஒரு வருடமாக  காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அந்த மாணவன் , மாணவியை திரைப்படம் பார்க்க ஆந்திரா அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் திரைப்படம் பார்க்காமல் ஆந்திர எல்லையில் உள்ள ஒரு ஏரியில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பெண்ணின் காதலன் தனது நண்பர்களுக்கு  போன் செய்து வரச் சொன்னார். இதையடுத்து அங்கு அந்த மாணவனின் நண்பர்கள் இரண்டு பேர் அங்கு வந்தனர்.
இதையடுத்து மாணவியின் காதலனும் , அவரது நண்பர் ஒருவரும் மதிய உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.பின்னர் மாணவியுடன் இருந்த ஒரு மாணவன் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். அந்த மதுவை குடித்த மாணவி சில நிமிடங்களில் மயங்கியுள்ளார்.
இதைப் பயன்படுத்தி கொண்ட அந்த நபர்அந்த மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கு வந்த மாணவியின் காதலன் ,அவருடன் இருந்த இன்னொரு நண்பர் இருவரும் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாலை  அந்த  மாணவியை வேப்பனப் பள்ளியில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.
இதையடுத்து தனக்கு நடந்த கொடுமையை அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பிறகு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்து உள்ளனர். புகார் அடிப்படையில் அந்த மாணவியின் காதலன் உட்பட அவரது இரண்டு  நண்பர்களையும்  போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!