அமெரிக்க இண்டர்நெட் நிறுவனமான ஹூகெஸ்
என்ற நிறுவனம் திவால் ஆகி விட்டதாகவும் இதனால் மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய
நிலுவை தொகையை செலுத்த முடியாது என்றும் தொலைத்த அமைச்சருக்கு கடிதம்
எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலகம்
முழுவதும் இன்டர்நெட் சேவையை வழங்கிவரும் நிறுவனங்களில் ஒன்று ஹூகெஸ் நெட்வொர்க்
சிஸ்டம். அமெரிக்காவின் சாட்டிலைட் நிறுவனமான இந்நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை
கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்தது. தனியார் வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள்
ஆகியவற்றுக்குச் இன்டர்நெட் சேவை வழங்கி வந்த இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு
செலுத்த வேண்டிய 600 கோடி ரூபாயை செலுத்த முடியாது என்றும் தங்களது நிறுவனம்
திவால் ஆகி விட்டதால் இந்த பணத்தை செலுத்த
முடியாது என்று கடிதம் எழுதியுள்ளது.
தொலைத்தொடர்பு
அமைச்சருக்கு இந்நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது மட்டுமின்றி இந்தியாவில் தனது
சேவையை நிறுத்திக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு மட்டுமின்றி
இந்த நிறுவனத்தின் பயனர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக