தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான
கடைகளில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயருகிறது.
தமிழகம்
முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப
கழகம் நடத்தி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில்
மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில்
அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு
இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன்
கூடுதலாக ரூ.10-ம், ஆப் ரூ.20-ம், புல் ரூ.40-ம் பீர் பாட்டிலும் தற்போது விற்கும்
விலையுடன் கூடுதலாக ரூ.10-ம் வாங்க வேண்டும்.
கடந்த
ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய்
கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக