10 ரயில்வே
மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசு தெற்கு ரயில்வேக்கு வெறும் பத்தாயிரம்
ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்து அதிர்ச்சியளித்தது. இதனால் தமிழ்நாட்டில் ரயில்வே
திட்டங்கள் கிடப்பில் போடப்படும் சூழல் நிலவுவதால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் டாக்டர்.எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களுக்கு உள்ளே செல்வதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் மூலம் மட்டும் ரூ.140 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 12 மாதங்களில் மட்டும் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.5ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10ஆக உயர்த்திய ரயில்வே வாரியம், கூட்ட நெரிசல் உள்ளிட்ட ஏதேனும் குறிப்பிட்ட தேவை இருக்கும் பட்சத்தில் ரூ.10க்கும் அதிகமாக பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை அந்தந்த ரயில்வே பிரிவுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
Price hike in
Platform Ticket at Dr. MGR Chennai Central Railway Station.
https://t.co/mluQHsDiuT
—
@GMSouthernrailway (@GMSRailway) 1582203074000
இந்நிலையில், டாக்டர்.எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10லிருந்து ரூ.15ஆக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு
இந்த விலை உயர்வானது வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், கோடை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக