Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

வடிவேலுக்கு பிறகு இவர் தான்!! நெட்டிசன்களால் கொண்டாடப்படுபவருக்கு இன்று பிறந்தநாள்



நெட்டிசன்களால் மீம்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுபவரான ஒசிட்டா ஐஹிம்க்கு இன்று பிறந்தநாள்

நெட்டிசன்கள் மீம்களுக்கு அதிகமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவை பயன்படுத்துவார்கள். எனினும் அதற்கு அடுத்தப்படியாக மீம்களில் உபயோகிக்கப்பட்டவர் யார் என்று பார்த்தால், ஒசிட்டா ஐஹிம் ஆக இருப்பார்.
இவரது புகைப்படத்தை மீம்களுக்கு பயன்படுத்துபவர்கள் கூட இவர் யார் என்பது தெரியாது. இந்நிலையில் இன்று ஒசிட்டா ஐஹிம் தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆம், நாம் பெரும்பாலோர் நினைப்பது போல் இவர் சிறுவன் கிடையாது. இவர் 1982 ஆம் ஆண்டில் பிறந்தவர். மேலும் தனது 16 வயதிலேயே, அதாவது 1998 ஆம் ஆண்டு ‘ஆப்ரிக்காவின் ஆஸ்கர்” என்று அறியப்படும் ஆப்ரிக்கன் மூவி அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.


மேலும் 2011 ஆம் ஆண்டில், நைஜீரிய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக, ஃபெட்ரல் குடியரசின் விருது அந்நாட்டின் குடியரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் பிறந்தநாளுக்கு உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Ŧɭɭ๏ฬєг_קкן (@follower_pkjs) February 20, 2020
Happy Birthday Osita Iheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக