சத்தான முருங்கை கீரை பூரி செய்யும்
முறை
நம்மில் அதிகமானோர் மைதா அல்லது கோதுமை மாவில் தான் விதவிதமாக
பூரி செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான முருங்கைக்கீரை பூரி
செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கோதுமை மாவு – 2 கப்
- வெள்ளை ரவை – 2 மேசைக்கரண்டி
- முருங்கைக்கீரை – கைப்பிடி அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
முருங்கைக் கீரையை தனித்தனியாக
சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு
அதனுடன் ரவை, உப்பு, சுத்தம் செய்த முருங்கைக்கீரை, அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்ற
வேண்டும்.
பின் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான
அளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.
சப்பாத்திக்கு பிசைவது போல பிசையாமல், சிறிது
கெட்டியாக பிசைய வேண்டும்.
பின் இட்லி துணியை நீரில் நனைத்து பிசைந்த மாவினை அரை
மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்பு மாவை எடுத்து சிறு உருண்டைகளாக
உருட்டி வைத்து, பூரியாக தட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில்
ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.
இப்போது சத்தான முருங்கைக் கீரை
பூரி தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக