முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவை
தொடர்ந்து (இனிமேல் இலவச அழைப்புகள் கிடையாது என்று அறிவித்ததற்கு பின்னர்) பார்தி
ஏர்டெல் மீதான வெறுப்புணர்ச்சி மேலோங்க தொடங்கியுள்ளது. ரூ.45 எனும் கட்டாய
ரீசார்ஜ் திட்டமானது அதற்கு "அடித்தளம்" போட ஏர்டெல் நிறுவனத்தின்
சமீபத்திய அறிவிப்பு ஒன்று அதன் மேல் ஒரு "கட்டிடத்தையே" கட்டியுள்ளது
என்று கூறலாம். ரூ.45 என்கிற கட்டாய ரீசார்ஜை தெடர்ந்து, ஏர்டெல்
வாடிக்கையாளர்களின் கைகளில் இருந்து நெட்பிலிக்ஸ் சேவைக்கான இலவச அணுகல்
பறிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் யாருக்கெல்லாம் நெட்பிலிக்ஸ்
சேவைக்கான இலவச அணுகல் கிடைக்காது?
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் அல்லது
ஏர்டெல் பிராட்பேண்ட் என அழைக்கப்படும் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களானது
வழக்கமான டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளை தவிர்த்து கூடுதல் நன்மைகளுக்காக நன்கு
அறியப்படும் ஒரு சேவை ஆகும். தொழில்துறையில் உள்ள மற்ற பெரும்பாலான பிராட்பேண்ட்
திட்டங்களானது டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்த,
ஏர்டெல் பிராட்பேண்ட்டோ தனது சந்தாதாரர்களுக்கு எப்டியெல்லாம் கூடுதல் நன்மைகளை
வழங்கலாம் என்பதில் அதிக கவனம் செலுத்தியது.
நெட்பிலிக்ஸ் பறிக்கப்பட்டாலும் கூட
ஆறுதல் அளிக்கும் அமேசான் ப்ரைம் சந்தா!
அதன் விளைவாக, பாரதி ஏர்டெல்
பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோவின் கூடுதல் நன்மைகளில் அமேசான் ப்ரைம் வீடியோ,
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா மற்றும் மூன்று மாத கலாம் இலவச நெட்பிலிக்ஸ் சந்தா
போன்ற கூடுதல் சலுகைகளை வழங்கி வந்தது. ஆனால், தற்போது அனைத்து பாரதி ஏர்டெல்
திட்டங்களை - பிராட்பேண்ட் மட்டுமின்றி போஸ்ட்பெயர் - பயன்படுத்தும்
சந்தாதாரர்களிடமிருந்தும் நெட்பிலிக்ஸ் நன்மை பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,
பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது ரூ.999 மதிப்புள்ள, ஒரு ஆண்டு
முழுவதும் சேவையை வழங்கும் அமேசான் ப்ரைம் சந்தாவுடன் வரும் என்பது
குறிப்பிடத்தக்கது.
என்ன
காரணம்?
பாரதி ஏர்டெல் மற்றும் நெட்பிலிக்ஸ்
இடையேயான கூட்டு முடிவடைந்தது தான் இந்த சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கும் மேலாக, பாரதி ஏர்டெல் மட்டுமே நெட்பிலிக்ஸ் சேவையை
வழங்கும் நாட்டின் ஒரே பிராட்பேண்ட் சேவை வழங்குநராக இருந்தது, இது அதன்
சந்தாதாரர்களுக்கு மூன்று மாதங்கள் இலவசமாக நெட்பிலிக்ஸ் நன்மையை வழங்கி வந்தது,
ஆனால் இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், சரியான நேரத்தில் சந்தாவை எடுத்த
சந்தாதாரர்கள் அதை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். இந்த இடத்தில் - தற்போதைக்கு
யாரெல்லாம் நெட்பிலிக்ஸ் சந்தாவை வழங்குகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறதா? அதற்கான
பதிலை அறிய தொடர்ந்து படிக்கவும்.
'வித்தியாசமான" நெட்பிலிக்ஸ்
சேவையை வழங்கும் ஆக்ட் ஃபைபர்நெட்!
நெட்பிலிக்ஸ் சேவையை அனுபவிக்க
விரும்பும் சந்தாதாரர்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. முதலாவதாக, ACT
ஃபைபர்நெட் சேவை. இங்கே மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ACT
ஃபைபர்நெட் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச நெட்பிலிக்ஸ் சந்தாவை வழங்கவில்லை
என்றாலும் கூட, சந்தாதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கேஷ்பேக்காக
கொடுக்கிறது. அந்த தொகையை சந்தாதாரர்கள் தங்களின் நெட்பிலிக்ஸ் கட்டணத்தில்
பயன்படுத்தலாம். இதை சலுகையை பெற, சந்தாதாரர்கள் தங்களது ACT சேவைக்கான கட்டணத்தை
மாதந்தோறும் செலுத்தும் முறையை தேர்வு செய்ய வேண்டியிருக்கும், இதன் வழியாக
அவர்கள் குறைந்தபட்சம் ரூ.50 கேஷ்பேக்கை பெற முடியும். ஆக்ட் GIGA பிளான் போன்ற
மிகவும் விலை உயர்ந்த திட்டங்களுக்கு, சந்தாதாரர்கள் இன்னும் அதிகமான கேஷ்பேக்கைப்
பெறலாம், அதாவது மாதந்தோறும் ரூ.500 வரை சேமிக்கலாம் அதை அவர்களின் நெட்பிலிக்ஸ் கட்டணத்திற்காக
பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும் கூட இந்த ஆக்ட் பைபர் நன்மையானது பாரதி
ஏர்டெல் அதன் பிராட்பேண்ட் திட்டங்களில் வழங்கியதன் நன்மைக்கு "பக்கத்தில்
கூட" வரவில்லை என்பது வெளிப்படை.
ஓராண்டு காலம் இலவச நெட்பிலிக்ஸ்
சந்தா வேண்டுமா?
சந்தையில் பாரதி ஏர்டெல்-ன்
நெட்பிலிக்ஸ் சலுகையுடன் போட்டியிடும் ஒரு திட்டம் உள்ளது தான். ஆனால்
துரதிர்ஷ்டவசமாக, இது பிராட்பேண்ட் திட்டம் அல்ல. வோடபோன் REDX திட்டம் ஆகும்.
இந்த வோடபோன் REDX திட்டத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய பெரிய விஷயம்
என்னவென்றால், நெட்பிலிக்ஸ் நன்மை என்று வரும்போது, இந்த வோடபோன் திட்டமானது பாரதி
ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தை வெல்லும். ஆம்! பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட்
திட்டங்கள் மூன்று மாத நெட்பிலிக்ஸ் சந்தாவை மட்டுமே வழங்குகிறது. மறுகையில் உள்ள
வோடபோன் REDX திட்டமானது ஒரு முழு ஆண்டும் நெட்பிலிக்ஸ் சந்தாவை வழங்குகிறது.
வோடபோன் REDX திட்டத்தின் மற்ற
நன்மைகள்!
வோடபோன் REDX திட்டமானது ஒரு
மாதத்திற்கு 150 ஜிபி அளவிலான டேட்டா வரம்பைக் கொண்ட தனித்துவமான போஸ்ட்பெய்ட்
திட்டங்களில் ஒன்றாகும், மேலும் இது வோடபோனின் பொதுவான போஸ்ட்பெய்ட் மற்றும்
ப்ரீபெய்ட் திட்டங்களைப் பயன்படுத்துபவர்களை விட 50% அதிக வேகத்தை வழங்குவதாக
கூறப்படுகிறது. டேட்டா மற்றும் நெட்பிலி க்ஸ் நன்மைகளை தவிர்த்து, வோடபோன் REDX
திட்டமானது அதன் பயனர்களுக்கு சில தனித்துவமான நன்மைகளையும் வழங்குகிறது. அதில்
விமான நிலைய ஓய்வகங்களுக்கான அணுகல் மற்றும் ஹோட்டல்களில் தள்ளுபடிகள் போன்றவைகள்
அடக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக