Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தர்பார் நஷ்டம்: ரஜினி வீட்டிற்கு படையெடுத்த வினியோகஸ்தர்கள், தடுத்து நிறுத்திய போலீஸ்



 ர்பார் நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு ரஜினி வீடு நோக்கி வந்த வினியோகஸ்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்த தர்பார் படம் நஷ்டம் அடைந்துள்ளது. இதையடுத்து தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்திடம் முறையிட்டார்கள். எங்களுக்கே நஷ்டம் என்று லைகா தெரிவித்ததால் ரஜினியிடம் நஷ்டஈடு கேட்கிறோம் என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

நஷ்டஈடு கேட்டு ரஜினியின் வீட்டிற்கு கடந்த 30ம் தேதி சென்றார்கள் வினியோகஸ்தர்கள். இருப்பினும் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தர்பார் பட வினியோகஸ்தர்கள் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு நோக்கி சென்றார்கள். இதை பார்த்த போலீசார் அவர்களை ரஜினி வீட்டிற்கு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த வினியோகஸ்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

ரஜினி வீட்டிற்கு முன்பு குவிந்த வினியோகஸ்தர்கள் #rajinified #Darbar https://t.co/uaCvsdzObX
— Siva 1111 (@siva_chandran7) 1580717396000
வீட்டிற்கு வந்தால் ராகவேந்திரா மண்டபத்திற்கு செல்லுமாறு கூறுகிறார்கள். அங்கு சென்றால் ஒருவரையும் காணோம். என்ன எங்களை வைத்து விளையாடுகிறாரா ரஜினி என்று வினியோகஸ்தர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

தர்பார் படத்தால் தங்களுக்கு 30 சதவீதம் நஷ்டம் என்று வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தர்பார் ரூ. 150 கோடி வசூல் செய்ததாக பெருமையுடன் அறிவித்தது லைகா. படத்தை பார்த்த அனைவரும் ரஜினி இளமையாக, ஸ்டைலாக இருப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. கதையே இல்லாமல் படம் எடுத்து எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு ரஜினி வீட்டிற்கு முன்பு வினியோகஸ்தர்கள் குமுறல் #rajinikanth #Darbar https://t.co/tSpgLuzVTN
— Siva 1111 (@siva_chandran7) 1580717474000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக