மனிதர்கள் அனைவரின் வாழ்கையிலும் பணம் சம்பாதிப்பது என்பது
முக்கியமான ஒரு குறிக்கோளாக கருதப்படுகிறது. பணம் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையில்
மகிழ்ச்சியாக இருந்து விட முடியாது, ஆனால் பணம் பல மகிழ்ச்சியாக தருணங்களை உருவாக்கக்கூடியது.
பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும் கடினமான காரியம் அதனை சேமிப்பது.
உங்களிடம் இருக்கும் பணம் கணக்கே
இல்லாமல் செலவானால் அதற்கு காரணம் உங்களின் பொறுப்பற்றத்தன்மை மட்டுமல்ல உங்களிடம்
இருக்கும் வாஸ்து தோஷமும்தான். வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் பர்ஸில் நீங்கள்
வைக்கும் சில பொருட்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து உங்கள் செல்வத்தை இழக்க வைக்கும்.
இந்த பதிவில் உங்கள் பர்ஸில் நீங்கள் வைக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று
பார்க்கலாம்.
பழைய பில்கள்
உங்கள் பர்ஸில் எப்பொழுதும்
தேவையில்லாத பொருட்களை வைத்துக்கொள்ளக்கூடாது. குறிப்பாக பழைய பில்கள், க்ரெடிட்
கார்டு பில்கள், நீங்கள் பணத்தை செலவழித்தது தொடர்பான எந்த பில்களும்
இருக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும், இவற்றை அவ்வப்போது
சுத்தப்படுத்துவது பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
புகைப்படங்கள்
இறப்பது போன்ற புகைப்படங்கள்,
ஆபாசப்படங்கள், பயமுறுத்தும் புகைப்படங்கள் போன்ற உங்களை தவறான பாதையில்
வழிநடத்தும் படங்களை உங்கள் பர்ஸில் வைப்பதை தவிர்க்கவும். அதுபோன்ற புகைப்படங்கள்
உங்களை திசைதிருப்புவதோடு எதிர்மறை ஆற்றலையும் ஈர்க்கும்.
கிழிந்த பர்ஸ்
ஒருபோதும் கிழிந்த பர்ஸை
உபயோகிக்காதீர்கள். ஏனெனில் இது உங்களுக்கு பெருமளவில் பணஇழப்பை ஏற்படுத்தும்.
அதேபோல ஒருவர் உபயோகித்த பர்ஸை நீங்கள் மீண்டும் உபயோகிப்பது உங்களுக்கு
துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் புதிய பர்ஸை உபயோகிக்க முயலுங்கள்,
அதேபோல பர்ஸில் எப்பொழுதும் சிறிது பணமாவது வைத்திருக்க வேண்டும். ஒருபோதும் பர்ஸை
காலியாக வைத்திருக்காதீர்கள்.
எழுதப்பட்ட நோட்டுகள்
பெயர் எழுதப்பட்ட நோட்டுகள், பழைய
பெயர் பொறிக்கப்பட்ட கார்டுகள், மோசமான நினைவுகளை கொண்ட பொருட்கள் போன்றவற்றை
உங்கள் பர்ஸில் வைப்பதை தவிர்க்கவும். பர்ஸை ஒழுங்காக திட்டமிட்டு வைப்பது நேர்மறை
ஆற்றலை உங்களை நோக்கி ஈர்க்கும்.
மடிக்கப்படாத நோட்டுகள்
நோட்டுகளை எப்போதும் ஒழுங்காக மடித்து
வைப்பது என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் முடிந்தவரை அவ்வாறு செய்வது உங்களின்
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். கசங்கிய நோட்டுகள் எதிர்மறை ஆற்றலின்
வெளிப்பாடுதான்.
தின்பண்டங்கள்
பர்ஸுக்குள் சாக்லேட் போன்ற
தின்பண்டங்களை வைப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் நமது
அலட்சியமும், சோம்பேறித்தனமும்தான். நம்முடைய நேர்மறை ஆற்றலை அதிகரிப்பது என்பது
நமது கைகளில்தான் உள்ளது. இதனைத் தவிர்ப்பது சீரான நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
மருந்துகள்
பர்ஸில் மாத்திரைகள் மற்றும்
மருந்துகள் வைத்திருப்பது உங்களின் ஆரோக்கிய குறைபாட்டை வெளிப்படுத்தும். இதனை
பர்ஸில் வைத்திருப்பது மோசமான வாஸ்து சாஸ்திரத்தை ஏற்படுத்தும். ஒருவேளை இது
அவசியமானதாக இருந்தால் வேறு இடங்களில் வைக்கவும்.
கூர்மையான ஆயுதங்கள்
கூர்மையான ஆயுதங்கள் எப்போதும்
துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன்
உங்களின் முடிவெடுக்கும் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சிறிய கத்தி,
நகவெட்டி போன்றவற்றை ஒருபோதும் பர்ஸில் வைக்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக