Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 பிப்ரவரி, 2020

இதோ ஹூவாயின் காதலர் தின பரிசு; இனிமேல் வீடியோ கால் செய்ய வெளிச்சத்தை தேடி ஓட வேண்டாம்; ஏனென்றால்?

மிட்ரேன்ஜ் பிரிவில் சில அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை தன்வசம் கொண்டுள்ள ஹூவாய் நிறுவனம் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
ஹூவாய் நோவா 7i என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் குறிப்பிட்ட தேதியில் அறிமுகப்படுத்தப்படும். மலேசிய தொழில்நுட்ப தளமான சோயாசின்காவின் அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஒரு மிட் ரேன்ஜ் போனாக இருக்கும், 48 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும்.

இதில் மீ டைம் (Mee Time) எனப்படும் வீடியோ அழைப்பு அம்சமும் இடம்பெறும். இது குறைந்த ஒளி நிநிலைமைகளில் கூட செல்பீ கேமராவிலிருந்து சிறந்த வீடியோ மற்றும் ஆடியோ தரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
 
மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் அளவிலான முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும். மேலும் து கிரின் 810 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட பதிப்பு" தான் இந்த ஹூவாய் நோவா 7i என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.22,300 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றது. மேலும் இது கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை ஆகிய வண்ண விருப்பங்கள் கீழ் விற்பனைக்கு வருகிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அதன் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

 கேமராத்துறையை பொறுத்தவரை, ஹூவாய் நோவா 6 எஸ்இ ஆனது 4 கேமரா சென்சார்களை ஒரு ஸ்கார்ஷ் கேமரா தொகுதியில் கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 1.8) சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் + 8 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.4) அல்ட்ராவைட் ஆங்கிள் சென்சார் + எஃப் / 2.4 கொண்ட 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி அளவிலான மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக ஒரு 16 மெகாபிக்சல் (எஃப் / 2.0) கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 40W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 4200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான EMUI 10.0.1 கொண்டு இயங்குகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி (2.4GHz மற்றும் 5GHz), ப்ளூடூத் 5 LE, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இது 159.2 x 76.3 x 8.7 மிமீ மற்றும் 183 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக