>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 22 பிப்ரவரி, 2020

    நடுவிரல் (பாம்பு விரல் - சனி விரல்)!

     Image result for நடுவிரல் (பாம்பு விரல் - சனி விரல்)!
    டுவிரல் நீண்டும், அகன்றும், கனத்தும் காணப்பட்டால் இவர்கள் தங்களின் பேச்சாலே பிறரை கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம் இரக்க குணமும் இருக்கும். கடுமையான முயற்சி செய்து பொருள் சம்பாதிப்பார்கள். நம்பிக்கை உள்ளவர்கள். மனமும், உடலும் உறுதி படைத்தவர்கள்.

    நடுவிரல் மோதிர விரலைவிட நீளமாகக் காணப்பட்டால் கஷ்ட, நஷ்டங்களை சரிசமமாக அனுபவிப்பார்கள்.

    மோதிர விரலும், பாம்பு விரலும் ஒரே அளவு நீட்டமாக இருந்தால் இவர்கள் சூதாட்ட பிரியர்களாகவும், மற்றவர்களை விட வல்லவர்களாகவும் இருப்பார்கள்.

    ஆள்காட்டி விரலை விட பாம்பு விரல் சிறியதாக இருந்தால் இவர்களுக்கு சித்த பிரமை பிடிக்கக்கூடும். இவர்கள் பிறருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதால் பல இழப்புக்கு உள்ளாக நேரிடலாம்.

    நடுவிரல் மோதிர விரலைவிட குட்டையாக இருந்தால் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி மன நிம்மதியை இழந்து தவிப்பார்கள்.

    ஆள்காட்டி விரலும், பாம்பு விரலும் சமமாக இருந்தால் இவர்கள் பலபல தொல்லைகளுக்கு உள்ளாவார்கள்.

    நடுவிரலின் முனைப்பாகமானது அகலமானதாக இருந்தால் இரக்க சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும், கலையின் மேல் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். இந்த விரலின் முனைப்பாகம் கூர்மையாக இருக்குமானால் சுயநலவாதிகளாகவும், பிறருடைய துன்ப துயரங்களுக்கு இரங்காதவர்களாகவும் இருப்பார்கள்.

    நடுவிரலானது எவ்விதக் கனமும் இல்லாமல் அகலமும் குறைந்து, நீளமும் குறைந்து காணப்படுமானால் இவர்கள் மற்றவர்களுடைய வெறுப்புக்கு ஆளாக வேண்டி வரும். சின்ன சின்ன இன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவர். மேலும், இவர்களுக்கு சுயநலம் இருக்கும், கர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக