ராஜஸ்தான்
மாநிலத்தில் புதிய கலால் கொள்கை வெளியிடப்பட்ட பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம்
திங்கள்கிழமை கூடியது. அதில் மது பிரச்சினை தொடர்பான கேள்வியும் எழுந்தது. ஆளுநர்
உரையாற்றிய பிறகு விவாதத்தின் போது, பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் (Madan Dilawar)
மதுபானத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதுக்குறித்து
திலாவார் பேசும் போது, ஆதார் அட்டையின் (Aadhar Card) அடிப்படையில் மதுபானம்
விற்பனை செய்யப்பட்டால், அதை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
ராஜஸ்தான்
மாநிலத்தில் மதுபானம் (Liquor) குறித்த கலந்துரையாடலுக்கு மத்தியில், பாஜக
எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சர் மதன் திலாவரும் மது விற்பனையை ஆதார் அட்டையுடன்
இணைக்க பரிந்துரைத்துள்ளனர். சட்டமன்றத்தில் விவாதத்தின் போது திலாவர் இதனைத்
தெரிவித்தார். மதுவைத் தடுப்பது குறித்து மாநில அரசாங்கம் பேசு வருகிறது. ஆனால்
அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று
திலாவர் கூறினார்.
தனது
கருத்தை முன்வைத்து, ராம்கஞ்ச்மண்டி எம்.எல்.ஏ, ஆதார் அட்டையுடன் மது விற்பனையை
கட்டுப்படுத்துவதன் மூலம், அதை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.
மதுபானம் வாங்கும் போது வாடிக்கையாளரின் ஆதார் அட்டையும் பதிவு செய்யப்பட வேண்டும்
என்று திலவர் கூறினார். இதனுடன், பிபிஎல் அட்டை வைத்திருப்பவர்கள் எவ்வளவு
மதுபானம் வாங்குகிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும் என்றார்.
மது
விற்பனையை ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம், ஒரு நபர் மதுவுக்கு அதிக பணம்
செலவழித்தால், அவர் எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை அறிந்து, அத்தகைய நபர்களை
அடையலாம் கண்டறிந்து, அவர்களுக்கு பிபிஎல் அட்டை அல்லது வேறு எந்த அடிப்படையிலும்
அரசு மானியம் அல்லது பிற வசதிகள் வழங்குவது தெரியவந்தால், அதை நிறுத்த வேண்டும்
என்று திலாவர் கூறினார். ஏனென்றால் ஒருவர் மதுவுக்கு அதிக பணம் செலவழிக்க முடியும்
என்றால், அவர் தனது மற்ற செலவுகளையும் சமாளிக்க முடியும் என்று திலவர் தனது
கருத்தை தெரிவித்தார்.
மேலும்
பேசிய அவர், மாநில அரசாங்கம் ஏழைகளுக்கு எதிராக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
அதிக மது விற்பனை செய்து, அதன் மூலம் ஏழைகளை கொல்ல அரசாங்கம் விரும்புகிறது
என்றும், இந்த சம்பவம் ஏழைகளுக்கு அரசாங்கம் எதிரானது என்பதற்கு மிகப்பெரிய சான்று
என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக