Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

நீட்டிக்கப்படுகிறதா சின்னாம்மாவின் சிறைக்காலம் ? பரவிய சிறை வட்டார தகவல்

நீட்டிக்கப்படுகிறதா சின்னாம்மாவின் சிறைக்காலம் ? பரவிய சிறை வட்டார தகவல்


சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது .18 ஆண்டுகாலமாக நடந்து வந்த இந்த வழக்கில் ஜெயலலிதா மறைந்த காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.ஆனால் சசிகலா,இளவரசி,சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் 4 ஆண்டு சிறைதண்டனையோடு தலா 10 கோடி ரூபாய் அபராதமு விதிக்கப்பட்டது
இந்த உத்தரவை அடுத்து மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைக்காலமான மூன்று ஆண்டுகள் சிறைவாசம் முடிந்ததை அடுத்து அடுத்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளிவருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா செலுத்த தவறினால் அவருக்கு தண்டனை மேலும் ஒராண்டு நீடிக்கப்படும் என்று பெங்களூரு சிறைத்துறை தெரிவித்துள்ளது.இதனால், அவரது தண்டனை காலம் நீடிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியே சசிகலா வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக