Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 15 பிப்ரவரி, 2020

இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு…

இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு…



ம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள துருக்கி அதிபர் எர்டோகான் அந்நாட்டின்  நடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் நேற்று பேசினார், அப்போது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த வாரம் நடைபெற உள்ள உலக  நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேறும் முயற்சிக்கு துருக்கி ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் கூறிய அவர்,  காஷ்மீர் பிரச்னையை போராலும், அடக்குமுறையாலும் தீர்க்க முடியாது என்றும்,. நீதி, நியாயம் இவற்றின் அடிப்படையில்தான் தீர்க்க முடியும். நமது காஷ்மீர் சகோதர, சகோதரிகள் பல ஆண்டு காலமாக கஷ்டப்பட்டு வருகின்றனர். காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளவர்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான நடவடிக்கைகளால், அவர்களின் கஷ்டம் இன்னும் மோசமாகியுள்ளது. உலக அளவில் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண துருக்கி எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றார்.
மேலும்,  முதலாம் உலகப் போர் காலத்தில் துருக்கியில் நடந்த கலிபோலி போரில் இரு தரப்பிலும் 2 லட்சம் வீரர்கள் பலியாயினர். இதற்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் எந்த வித்தியாசம் இல்லை. இங்கு உள்ள அடக்குமுறைக்கு எதிராக துருக்கி எப்போதும் குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். 
ஏற்கனவே, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்திலும், காஷ்மீர் பிரச்னையை எர்டோகான் எழுப்பினார். அப்போதே, ‘காஷ்மீர் விஷயம் உள்நாட்டு விவகாரம், இது குறித்து துருக்கி கூறிய கருத்து வருத்தம் அளிக்கிறது,’ என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானில் துருக்கி அதிபர் எர்டோகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக