ஹரியானாவில் உள்ள ”டிரம்ப்” கிராமத்திற்கு தண்ணீர்
வசதியை செய்துகொடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் டிரம்ப்பிடம் வேண்டுகோள்
வைத்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த சுலப் இண்டர்நேஷனல் என்ற சேவை நிறுவனம் ,திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத ஒரு கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தனர். அதன் படி இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மரோரா என்னும் கிராமத்தில், கழிவறைகள் கட்டப்பட்டன. மேலும் விதவைகளுக்கும் கணவரால் கைவிட்டப்பட்ட பெண்களுக்கும் இலவச கல்வி வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.
இத்திட்டங்கள் அறிவித்தப்போது தான் முதல் முதலாக பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்துக் கொண்டனர். அந்நேரத்தில் மரோரா கிராமம் இச்சிறப்பை பெற்றதால் அக்கிராமத்திற்கு ”டிரம்ப்” கிராமம் என பெயரிடப்பட்டது.
காலப்போக்கில் அக்கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. அதன் பிறகு அக்கிராம மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பி இருந்தனர். டேங்கர் லாரி தண்ணீரை ரூ.1000க்கு வாங்குவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அந்த கிராமத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மற்றும் அனைத்து திட்டங்களும் சட்ட விரோதமானவை என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சுலப் இண்டர்நேஷனல் அந்த கிராமத்தில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை நீக்கியது. ஆனால் டிரம்ப் கிராமம் என்ற பெயர் மட்டும் அப்படியே இருந்தது.
இந்நிலையில் தற்போது டிரம்ப் இந்தியா வருவதை தொடர்ந்து, அக்கிராம மக்கள் “எங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்” என டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக