Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

நெல்லை: கூட்டுறவு வங்கியில் வித்தியாசமான ‘சீட்டிங்’!

திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் சுமார் ஒன்றரை கிலோ போலி நகையை வைத்து மோசடி நடந்திருப்பது தணிக்கை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்று 4ஆவது நாளாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து வந்த தணிக்கை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் நகை கடன்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தபோது சுமார் ஒன்றரை கிலோவுக்கும் மேற்பட்ட போலி நகைகளை வைத்து மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக விவசாய கடனில் தங்க நகைகள் போலியாகவும் போலி முகவரியிலும் கடன் வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்டப் பதிவாளர், உதவிப் பதிவாளர், தனி அதிகாரி மற்றும் தணிக்கை அதிகாரிகள் இணைந்து இன்று 4ஆவது நாளாக கடன் வழங்கப்பட்டுள்ள நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வுக்குப் பின்னர் இதுகுறித்து காவல்துறையில் முறைப்படி புகார் அளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பத்தில் வங்கி மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக