புதுக்கோட்டை
மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் புதுக்கோட்டையில் தனியார் கல்லூரியில்
படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே புதுக்கோட்டை புதிய
பேருந்து நிலையம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் டிக்டாக் என்ற பெயரில் சாலையில் நடந்து
செல்வோரை துன்புறுத்தும் விதமாகவும் பயமுறுத்தும் விதமாகவும் பல்வேறு திரை இசை பாடல்களுக்கு
நடனம் ஆடி வந்துள்ளார்.
இந்த காட்சியானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து பொதுமக்கள் இவரின் தொந்தரவை அடக்கி கொள்ள முடியாமல் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
மேலும் வாலிபரின் டிக்டாக் வீடியோக்கள்
செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டு அனைவரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் புதுக்கோட்டை
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் டிக்டாக் ஆசாமியை வடகாடு போலீசார்
மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகே அவர் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிய வரும்.
தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகே அவர் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிய வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக