நிறைய
பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பெரினியல் பகுதியில் கிழிசல் உண்டாகி வலியை அனுபவிக்கிறார்கள்.
இந்த வலி பிரசவத்த 2 வாரங்கள் வரை தொடர் கூடும். சில பேருக்கு கூடுதல் வாரங்கள் வரை
இருக்கலாம். இந்த வலியை சில இயற்கை முறைகள் மூலம் குறைக்கலாம். அதற்கான டிப்ஸ்கள் இதோ.
பிரசவமும்
பெண்ணின் பிறப்புறுப்பும்
பிரசவம்
என்பதே வலி நிறைந்தது. இது பெண்களுக்கு கஷ்டமான கால கட்டமாக அமைகிறது. இந்த
காலத்தில் பெண்கள் ஏகப்பட்ட உடல் அசெளகரியத்தை சந்திக்க நேரிடும். இதைப் போல ஒரு
குழந்தை பிறந்த பிறகு கூட பெண்கள் சில வேதனைகளை அனுபவிக்கின்றனர்.
அவற்றுள்
ஒன்று தான் இந்த பெரினியல் வலி. பிரசவத்தின் போது குழந்தையின் தலை பெண்ணின்
பிறப்புறுப் பகுதியின் வழியாக வெளியே வர முற்படும். அப்படி வரும் போது பெண்ணின்
பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள பெரினியலில் கிழிசல் உண்டாகிறது.
இந்த
கிழிசலால் பெண்களுக்கு வலி ஏற்படுகிறது. இந்த பகுதியில் ஏற்படும் கிழிசல்களுக்கு
மருத்துவர்கள் தையல் போட்டாலும் அந்த தையல் பிரியும் வரை வேதனை ஏற்படுகிறது என்று
கூறுகிறார்கள் பெண்கள்.
மேலும்
இந்த வலியால் அவர்களால் உட்காரக் கூட முடியாது. படுத்தே கிடக்க நேரிடும். இந்த
அசெளகரியத்தை எப்படி சமாளிப்பது என்பதே நிறைய பெண்களுக்கு தெரிவதில்லை. அதனால்
தான் இந்த பெரினியல் வலியை குறைக்க நாங்கள் சில டிப்ஸ்களை வழங்குகிறோம். .
தெரிந்து கொள்ளுங்கள்.
பெரினியல் பகுதி
யோனி
பகுதிக்கும் மலவாய் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி தான் பெரினியல் பகுதி.
பிரசவத்தின் போது 7 - 8 பவுண்ட் உள்ள குழந்தையை ஒரு சிறிய திறப்பு வழியாக தள்ளும்
போது இந்த பகுதியில் கிழிசல் உண்டாகிறது. இந்த வலி நபருக்கு நபர் வேறுபடுகிறது.
இதன் தீவிரம் நபர், பிறப்பு மற்றும் பிரசவ முறையால் மாறுபடுகிறது என்கிறார்கள்
மருத்துவர்கள்.
குழந்தை பிறப்பு
குழந்தை
பிறந்த பிறகு பெரினியல் மற்றும் மலவாய் பகுதியில் வீக்கம் உண்டாகிறது. இதனால்
ஏற்படும் வலி 3-5 வாரங்கள் வரை நீடிக்கும்.
பிறப்புறுப்புப்
பகுதி கிழிசல்
இதை
மருத்துவ பெயரில் எபிசியோடமி என்று கூறுகிறார்கள். பிறப்புக்கு பிறகு இந்த பிறப்புறுப்புப்
பகுதியில் ஏற்பட்ட கிழிசல் குணமாக 7-10 நாட்கள் வரை ஆகும். ஆனால் 6 வாரங்களுக்கு
மேல் அந்த பகுதியில் புண்கள் மற்றும் வலி உணர்வு இருக்க வாய்ப்புள்ளது.
சிசேரியன் வழி
பிறப்பு
இந்த
கிழிசல் பிரசவத்தின் போது எவ்வளவு அழுத்தத்தில் குழந்தையைப் புஷ் செய்தீர்கள், தலை
எவ்வளவு தூரம் பிறப்புறுப்புப் பகுதிக்கு அருகில் வந்தது என்பதை பொருத்து
அசெளகரியம் ஏற்படும்.
அதனால்
இந்த பெண்ணுறுப்பின் பெரினீயல் பகுதியில் ஏற்படும் கிழிசல் என்பது சுகப் பரசவம்
மற்றும் சிசேரியன் ஆகிய இரண்டிலுமே ஏற்படும். அதனால் மிகவும் கவனமாக இதைக் கையாள
வேண்டும்.
பெரினியல் வலியை
போக்க சில டிப்ஸ்கள்
பிறப்புறுப்புப்
பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
சிறுநீர்
கழித்த பிறகு பெண்ணுறுப்புப் பகுதியில் வெதுவெதுப்பான நீரைத் தெளிக்கலாம். இது
கிழிசலில் சிறுநீர் பட்டு எரிச்சலாகமல் இருக்க உதவி செய்யும்.
ஐஸ் ஒத்தடம்
கொடுங்கள்
பெரினியல்
பகுதியில் ஏற்பட்ட வீக்கத்தை போக்க கையுறையில் ஐஸ் கட்டிகளை நிரப்பி ஒத்தடம்
கொடுங்கள். பிரசவம் ஆன 24 நேரத்தில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இப்படி ஒத்தடம்
கொடுங்கள்.
மேக்ஸி பேட்களை பயன்படுத்தலாம்.
பிரசவத்திற்கு
பிறகு ஏற்படும் பெரினியல் வலியை குறைப்பதற்காகவே சூனிய வகை காட்டுச் செடியின்
மூலம்(விட்ச் ஹாசில்) தயாரித்த க்ரீம்கள் கிடைக்கின்றன. இது ஆல்கஹால் இல்லாத
பொருளும் கூட. இதை நீங்கள் கடைகளில் ஸ்பீரே பாட்டில் வடிவில் அல்லது க்ரீமாக
கிடைக்கின்றன. இதை வாங்கி இரவில் மேக்ஸி பேடுகளில் இந்த மருந்தை ஸ்பீரே செய்து
பேட் நனையும் படி செய்யுங்கள். பிறகு அதை மடித்து பிரிட்ஜில் வைத்து
கூலாக்குங்கள். பிறகு இதை ஐஸ் கட்டியை போல ஒத்தடம் கொடுக்க பயன்படுத்துங்கள்.
வெதுவெதுப்பான
குளியல்
பெரினியல்
வலியை குறைக்க வெதுவெதுப்பான டப் குளியல் மேற்கொள்ளலாம். உங்க யோனி பகுதி நனையும்
விதத்தில் ஒரு டப் முழுவதும் வெதுவெதுப்பான நீர் நிரப்பி 20 நிமிடங்கள்
உட்கார்ந்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு சில தடவை செய்யும் போது உங்க
அசெளகரியம் குறையும்.
உணர்வின்மை க்ரீம்
மருத்துவரிடம்
ஆலோசனை பெற்று அசிடமினோபன் (டைலெனால்) போன்ற உணர்வின்மை மருந்தை நீங்கள்
பயன்படுத்தலாம். இது க்ரீம், ஸ்பீரே, களிம்புகள் மற்றும் பேடு வடிவங்களில்
கிடைக்கிறது. இது ஒரு அனஸ்தீசியா மருந்து மாதிரி செயல்படுகிறது.
அழுத்தம்
கொடுக்காதீர்கள்
நீண்ட
நேரம் உட்கார்ந்தோ அல்லது நின்றோ பெரினியல் பகுதிக்கு அழுத்தத்தை கொடுக்காதீர்கள்.
முடிந்த வரை ஒரு சைடாக படுத்து ஓய்வெடுக்க பாருங்கள். முடிந்த வரை நடுவில் ஓபனாக
இருக்கும் தலையணையை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு செளகரியமாக உட்கார உதவும்.
இது உட்காரும் முன் உங்க பிட்ட தசைகளை இறுக்கி வலிக்காமல் பார்த்து கொள்ளும்.
தளர்ந்த உள்ளாடைகளை
அணியுங்கள்
இறுக்கமான
உள்ளாடைகளை அணியும் போது புண்களில் உரசி கூடுதல் எரிச்சலை உண்டாக்க வாய்ப்புள்ளது.
எனவே தளர்ந்த உள்ளாடை மற்றும் ஆடைகளை அணியுங்கள். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்றவை
வேண்டாம்.
மலச்சிக்கல்
இருக்கும்
பிரசவத்திற்கு
பிறகு இந்த பெரினியல் வலியால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும். எனவே நிறைய
தண்ணீர் குடியுங்கள். நார்ச்சத்துகள் உள்ள உணவுகளை உண்ணும் போது மலம் இலகுவாக
வெளியேற உதவுகிறது. மருத்துவரிடம் அணுகி மலமிளக்கி மருந்துகளையும் வாங்கிக்
கொள்ளலாம்.
மூலநோய்
பிரசவத்தின்
போது குழந்தையை வெளியே தள்ள அதிக அழுத்தத்துடன் புஷ் செய்வதால் மலவாய் பகுதியில்
மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மலம் கழிக்கும் போது இரத்தம் வரும். ஆனால்
இந்த பிரச்சினை படிப்படியாக சரியாகி விடும். ரெம்ப வலி இருந்தால் மருத்துவரை அணுகி
சிகிச்சை பெறுங்கள்.
உடலுறவு வேண்டாம்
பிரசவித்த
3 மாதங்களுக்கு உடலுறவு வைத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் பெரினியல்
பகுதியில் கூடுதல் வலி உண்டாக வாய்ப்புள்ளது. பிரசவ் நிகழ்ந்து பெண்ணுறுப்பில்
ஏற்படும் வில மற்றும் வேறு பல மாற்றங்களும் சரியாகி, நீங்கள் இயல்பு நிலைக்கு
வருவதற்கே இரண்டு மாதங்களுக்கு மேல் தேவைப்படும். அதைத்தாண்டி, பெண்ணுறுப்பி்ல்
வலி கொஞ்ச நாளைக்கு இருக்கத்தான் செய்யும். அந்த வலியை சரியாவதற்கு முன் உறவு
கொண்டால், மீண்டும் அதிகமாகும். அதனால் பிரசவித்த பின் குறைந்தது மூன்று மாதங்களுக்காவது
உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஆராய்ச்சித் தகவல்கள்
இந்த
பெரினியல் வலியை குறித்து ஆராய்ந்ததில் யோனி பகுதியில் கிழிசல் ஏற்பட்டவர்களை விட
30 % பெண்கள் பெரினியல் பகுதி கிழியாமல் ஏற்பட்ட வலி அதிகம் என்று கூறியுள்ளனர்.
பெரினியல்
விளைவு பெண்ணுக்கு பெண் வேறுபடுகிறது. 75 %பெண்கள் பிரசவத்திற்கு பிறகு ஒரு நாள்
கழித்தும், 38 %பெண்கள் ஒரு வாரம் கழித்தும் வலியை உணர்கிறார்கள் என்று சில
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1
மற்றும் 2 ஆம் டிகிரி கிழிசல்
95
% பெண்கள் பிரசவத்திற்கு பிறகு 1 அல்லது 2 ஆம் டிகிரி கிழிசலில் யோனி யின் தோல்
மற்றும் தசை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 60 %பெண்கள் ஒரு வாரத்திற்கு பிறகு
பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
97
%பெண்கள் பிரசவம் ஆன ஒரு நாள் கழித்து பெரினியல் வலியை உணர்கிறார்கள். 71 %பெண்கள்
7 நாட்கள் கழித்து உணர்கிறார்கள் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
3 - 4 டிகிரி
பெரினியல் கிழிசல்
3
ஆவது 4 வது டிகிரி பெரினியல் கிழிசலில் கிழிசல் மலக்குடல் வரை செல்கிறது. இதில்
100 % பெண்கள் பிரசவத்தை தொடர்ந்து 1 நாள் வலியும் 91 % பெண்கள் ஒரு வாரம் கழித்து
வலியையும் உணர்ந்து உள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக