Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

விக்கிபீடியாவிலும் முதல் இடம் பிடித்த தமிழ் மொழி!!

விக்கிபீடியா வேங்கைத்திட்டம் என்ற பெயரில் அனைத்து மொழிகளிலும் கட்டுரைப் போட்டி நடத்தி இருந்தது. இதில் தமிழ் அதிக கட்டுரைகளை வெளியிட்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

விக்கிபீடியாவும், கூகுள் இணையதளமும் இணைந்து மூன்று மாதங்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்துகிறது. முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பரிசு அளிக்கிறது. 

இதன்படி கடந்தாண்டு அக்டோபர் முதல் 2020 ஜனவரி வரை தமிழ் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. வேங்கைத் திட்டம் என்ற பெயரில் இந்தக் கட்டுரைப் போட்டி அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தேசிய அளவில் உள்ள மொழிகளில் இந்தக் கட்டுரைப் போட்டிக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. கொடுக்கும் தலைப்பில் 300 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். கூகுள் மொழி பெயர்ப்பை பயன்படுத்தக் கூடாது. மற்ற மொழி பெயர்ப்பு கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. தகவல்கள் நிறைந்து இருக்க வேண்டும். இதுதான் தேர்வின் முக்கிய விதிகள்.

கடந்தாண்டு முதல் முறையாக இந்த தேர்வு நடத்தப்பட்டது. தமிழுக்கு இணையாக இந்தி மொழியும் விக்கிபீடியாவில் இடம் பெறுவதால், கடந்தாண்டு இந்தி மொழியில் அதிக கட்டுரைகள் வெளியாகி முதல் இடத்தைப் பிடித்து இருந்தது. தமிழ் மொழி இரண்டாம் இடத்தைப் பெற்று இருந்தது.

ஆனால், நடப்பாண்டில் முடிந்த தேர்வில் தமிழ் மொழி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் இருந்து தமிழர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 2959 கட்டுரைகள் தமிழில் வெளியாகி இருந்தது.

தமிழில் மொத்தம் 62 கட்டுரையாளர்கள் பங்கேற்று, 2959 கட்டுரைகளை வெளியிட்டு இருந்தனர். பஞ்சாபி மொழியில் 1768 கட்டுரைகளை 34 பேர் எழுதி இருந்தனர். மேற்குவங்க மொழியில் 1460 கட்டுரைகளை 49 பேரும், உருது மொழியில் 1377 கட்டுரைகளை 25 பேரும், இந்தி மொழியில் 417 கட்டுரைகளை 26 பேரும் எழுதி இருந்தனர்.

இதையடுத்து கன்னட மொழியில் 249 கட்டுரைகளை 17 பேரும், தெலுங்கு மொழியில் 416 கட்டுரைகளை 42 பேரும், மலையாளத்தில் 229 கட்டுரைகளை 8 பேரும் எழுதி இருந்தனர்.

இந்த வரிசையில் தமிழ் மொழி அதிக கட்டுரைகளை வெளியிட்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் மொழி இணையவாசிகள் அதிகரித்து வருவதும், கட்டுரைகள் அதிகளவில் வெளியாவதும், எழுத்து துறையில் அதிகளவில் தமிழர்கள் ஆர்வமாக இருப்பதும் இதில் இருந்து உறுதியாகிறது. இன்று தாய் மொழி தினம் என்பதால் தமிழுக்கு வலு சேர்க்க உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக