Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 பிப்ரவரி, 2020

SFT-SAT என்ற செயற்கைகோளை உருவாக்கிய 12ஆம் வகுப்பு மாணவிகள்… உலகையே திரும்பி பார்க்க வைத்த சிங்கப்பெண்கள்…

Image result for அமைச்சர் சம்பத்தை சந்தித்த மாணவிகள்





புதுக்கோடை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு  மாணவிகள் சுபானா மற்றும் கீர்த்தனா ஆகியோர் SFT-SAT என்ற செயற்கை கோளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த செயற்கை கோள் மெக்சிகோவில் உள்ள ஏர்பேஸ்லா ஹீலியம் கேப்சூல்  மூலம்  விரைவில் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள  மாணவிகள்,
இந்த செயற்கைக்கோள் மூலம் புவியின் பருவநிலை மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும். மேலும், வளி மண்டலத்தில் உள்ள உயிர்வளி, காரியமில வாயு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவற்றை அளவிட்டு அதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களை  பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.
மேலும், இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்த பட்டதும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய நிலங்களையும் ஆராய்ந்து பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து எந்த நிலத்தில் என்ன மாதிரியான பயிர் செய்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர்.
இந்நிலையில்,  நேற்று சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து  தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக