ஜெர்மன்
நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்ட் எனக் கூறப்படும் டெலிஃபங்கன் (Telefunken)
நிறுவனம் தனது புதிய 32-இன்ச் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை விற்பனைக்கு
கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது பட்ஜெட் விலையில்
வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
TFK32QS ஸ்மார்ட்
டிவி
டெலிஃபங்கன்
நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த TFK32QS ஸ்மார்ட் டிவி ஆனது ஆஃப்லைன் தளங்களில்
விற்பனைகக்கு வருகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த
ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
1366×768 பிக்சல்
திர்மானம்
டெலிஃபங்கன்
நிறுவனத்தின் வுகுமு32ஞளு 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எல்இடி எச்டி-ரெடி டிஸ்பிளே
வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1366×768 பிக்சல் திர்மானம் மற்றும் 16:7 என்ற
திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. இது கிரிக்கெட் பட பயன்முறையை
உள்ளடக்கியது, எனவே சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
மென்பொருள் வசதி
இந்த
ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 8.0இயங்குதளத்ததை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது,எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும்
குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் டெலிஃபங்கன் ஸ்மார்ட்
டிவி.
1ஜிபி ரேம் மற்றும்
8ஜிபி மெமரி
32-இன்ச்
டெலிஃபங்கன் ஸ்மார்ட் டிவியின் சேமிப்பு பற்றி பேசுகையில், 1ஜிபி ரேம் மற்றும்
8ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்ட்ரீம்வால் யுஐ
வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்டிவி மாடல்.
ஹாட்ஸ்டார், ஜீ 5
இதுதவிர
TFK32QS ஸ்மார்ட் டிவி மூவி பாக்ஸின் இலவச சந்தாவுடன் வருகிறது, இது ஹாட்ஸ்டார்,
ஜீ 5, சோனி லிவ், வூட், ஆல்ட் பாலாஜி, ஜியோ சினிமா போன்ற சான்றளிக்கப்பட்ட
பயன்பாடுகளை கொண்டுவருகிறது. மேலும் எளிதான இடைமுகம் மற்றும் புதிய
உள்ளடக்கத்திற்கான டிவி தானியாங்கி ஒடிஏ ஃபார்ம்வேர் புதுப்பிப்புகளை ஆதரிக்கிறது.
TFK32QS 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் 20வாட் ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும்
இது 5ஆடியோ முறைகளை ஆதரிக்கின்றன, அதில் சரவுண்ட் ஒலியும் இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
இணைப்பு ஆதரவுகள்
இதுதவிர
புளூடூத் இணைப்பு மற்ற ஆடியோ சாதனங்களை ஸ்மார்ட் டிவியுடன் இணைக்க உங்களை அனுமதிக்கிறது.
பின்பு இந்த சாதனத்தில் எச்டிஎம்ஐ போர்ட்கள், 2யுஎஸ்பி போர்ட்கள், ஆப்டிகல்
அவுட்புட்,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளன.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்டிவி
மாடல் தங்கள் ஸ்மார்ட்போனை ஏர் மவுஸாக பயன்படுத்த அனுமதிக்கிறது, மேலும் இந்த சாதனத்தில்
விலை ரூ.9,990- ஆக உள்ளது.. பின்பு கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 'டெலிஃபங்கன் டிவி சேவை'
ஆப் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக