பொறுமையும், நிதானமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மனதில் பலவிதமான சிந்தனைகளும், தோற்றப் பொலிவில் மாற்றமும் உண்டாகும். வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். முயற்சிகளில் அலைச்சல் ஏற்பட்டாலும் எண்ணிய எண்ணம் ஈடேறும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதற்கான சூழல் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பொருள் வரவு உண்டாகும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தெய்வீக பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் கடன்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிப்புகளை அதிகப்படுத்த இயலும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
பெண்களுக்கு :
கணவன், மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. புத்திரர் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சுபகாரியங்கள் நடைபெறும். செய்யும் காரியங்களில் எண்ணிய வெற்றியும், செல்வாக்கும் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
பணியில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய வேலை தேடுவோருக்கு சிறு தடைகளுக்கு பின்பே சாதகமான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் அபிவிருத்திக்கான எண்ணங்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். புத்திரர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்கள் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு மற்றும் சமூக பணியில் இருப்பவர்களுக்கு வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும், பொருட்சேர்க்கையும் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் தனலாபம் உண்டாகும். தொண்டர்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு புதிய பயிர் விளைச்சல்களில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பூக்கள் மற்றும் வாசனைப் பொருட்கள் மூலம் லாபம் மேம்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த இயந்திரங்களால் தனவரவு மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். சம வயதினருடன் தேவையற்ற பிரச்சனைகளை மற்றும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். வெளியூர் தொடர்பான கலை நிகழ்ச்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகளும், கற்பனைகளும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரம் :
வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வழிபட்டு வர பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக