கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஒருபகுதியாக தமிழகம் முழுதும் 15,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவை முதல்வர் பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
தொடர்ந்து கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., தமிழகம் முழுதும் 15,000 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கூட்டமாக கூடக்கூடாது. வெளியூர் செல்லக்கூடாது, முதியவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். மீறினால் அவர்கள் மீது 144 தடை உத்தரவு பாயும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக