Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 153


வேள்விகள் ஆரம்பித்தல் :

ராசரர் தனது குருவிடம், எம்பெருமான் அருளிய... அரக்கர்களை அழிப்பதற்கான யாக வேள்விக்கான உபாசனைகளை கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். எம்பெருமான் அருளிய விதத்தின் அடிப்படையில் யாக வேள்விகளை வளர்க்க அதில் அக்னியும் வளர வளர அதிலிருந்து வெளிப்பட்ட புகையானது மூவுலகிலும் உள்ள அரக்கர்களை தேடிச்சென்று கொல்லத் தொடங்கியது. அந்த புகையால் ஆயிரமாயிரம் அரக்கர்கள் மாண்டு கொண்டிருந்தனர்.

வசிஷ்டரின் அறிவுரைகள் :

அரக்கர்கள் யாவரும் மாய்ந்து கொண்டிருப்பதை தனது ஞான பார்வையால் கண்ட வசிஷ்டர், பராசரரை நோக்கி நாம் வளர்க்கும் இந்த வேள்விகளை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம். ஏனெனில் பல ஆயிரக்கணக்கான அரக்கர்கள் இறந்துள்ளனர். நமது எண்ணம் பழிக்கு பழி வாங்குவதாக இருந்தாலும் குலநாசம் செய்வது நமது குலத்திற்கு மாபெரும் பாவத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அதை நாம் இனி செய்ய வேண்டாம். நமது குல தொழிலாகிய இறைவனை தொண்டு செய்து நாம் புண்ணியத்தை தேடுவோம் என்று கூறினார்.

வேள்வியை நிறைவு செய்தல் :

வசிஷ்டர் கூறியதைக் கேட்டதும் பராசரர் எனது குருவும், மாதாவும், பிதாவும் தாங்களே. தங்களின் அறிவுரைப்படியே நான் இந்த வேள்வியை இத்துடன் நிறைவு செய்து கொள்கின்றேன் என்று கூறி தான் வளர்த்த வேள்வியை நிறைவு செய்து கொண்டார். பராசரர் வேள்வியை நிறைவு செய்ததை கண்டதும் அவரை மனதார வாழ்த்தி பாராட்டி ஆசி வழங்கினார்.

மெய்ஞானம் பெறுதல் :

பராசரர் தான் நடத்திய யாகத்தை நிறுத்தியதும் அதற்கான காரணத்தையும், பின்னர் வசிஷ்டரின் அறிவுரையின் அடிப்படையில்தான் வேள்வியானது நிறுத்தப்பட்டது என்பதையும் அறிந்த புலஸ்திய முனிவர் அங்கு விரைந்து வந்தார். பின்பு பராசரரை நோக்கி பிரம்ம ரிஷியான வசிஷ்டரின் அறிவுரையின் அடிப்படையில் நீ வளர்த்த வேள்வியை நிறுத்தியமையை நான் அறிவேன்.

அதை அறிந்த கணம் முதலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அரக்கர்களை நீ வளர்த்து வந்த வேள்வியால் கொன்றமையால் உன்னை மெய்ஞானம் விடுத்து அஞ்ஞானம் மையம் கொண்டுள்ளது. உம்மை பிடித்துள்ள அஞ்ஞானம் விடுத்து மெய்ஞானம் பெற வேண்டுமாயின் பிரம்ம ரிஷியான வசிஷ்டர் மற்றும் நான் அளிக்கும் ஆசீர்வாதம் இணைந்து உன்னை பிடித்துள்ள அஞ்ஞானத்தை விடுத்து மெய்ஞானம் பெறுவாய் என்று கூறி ஆசியும் அருளினார்.

சுயம்பு முனிவரின் மகனான உத்தானபாதனுக்கு சுரூசி, சநீதி என்று இரண்டு மனைவிகள். தனது இளைய மனைவியான சுரூசியின் இளமையிலும், காண்போரை கவர்ந்திழுக்கும் அழகிலும் தன்னை முழுமையாக மறந்து எப்பொழுதும் இளைய மனைவியின் எண்ணமாகவே வாழ்ந்து வந்தார் மன்னனான உத்தானபாதன்.

கடமையை மறத்தல் :

இளைய மனைவியின் அருகாமையிலேயே மன்னனான உத்தானபாதன் இருந்தமையால் அரசு தொடர்பான அனைத்து செயல்பாடுகள் மற்றும் விவரங்கள் என அனைத்திலும் அவர் முழுமையாக ஓய்வுப்பெற்று சுரூசியின் இடமே தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அவளிடமே தனது வாழ்க்கை என முழுமையாக வாழ்ந்துகொண்டிருந்தார்.

சிவபெருமானின் முகமும் தோற்றமும் :

சிவபெருமானுக்கு மகாசதசிவ ரூபத்தில் பல வகையான தோற்றம் இருப்பினும் பொதுவாக ஐந்து தோற்றங்கள் முதன்மையாக கருதப்படுகின்றன. சில இடங்களில் இவைகள் சிவ முகமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவைகள் :

சத்யோசாதம் முகம் அல்லது தோற்றம்,
வாமதேவம் முகம் அல்லது தோற்றம்,
அகோரம் முகம் அல்லது தோற்றம்,
தற்புருடம் முகம் அல்லது தோற்றம்,
ஈசானம் முகம் அல்லது தோற்றம்,
என ஐந்து முகங்கள் அல்லது தோற்றங்கள் இருக்கின்றன.
பொறுப்புகளை ஏற்றல் :

மன்னனின் இந்த செயல்பாடுகளால் அரசு சார்ந்த அனைத்து பணிகளிலும் சுரூசியின் தலையீடும், அவரின் செல்வாக்கும் அதிகமாக இருந்து வந்தன. அரசு தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் சுரூசியின் முடிவே இறுதி முடிவாக கருதப்பட்டு அவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

போட்டிகள் உருவாதல் :

இந்நிலையில் முதல் மனைவியான சநீதிக்கு துருவனும், இளைய மனைவியான சுரூசிக்கு உத்தமன் என்ற குழந்தையும் பிறந்தன. குழந்தை பிறந்தது முதல் கணவரின் முழு கவனத்தையும், அரசு தொடர்பான அனைத்து அதிகாரத்தையும் தானே ஏற்க வேண்டும் என எண்ணி முதல் மனைவியான சநீதிக்கு இன்னல்களை உருவாக்கத் தொடங்கினார் இளைய மனைவியான சுரூசி.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக