கொரோனா வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து உள்நாட்டு
விமானப் பயணம் 20-30 சதவீதம் குறைந்துள்ளது என்றும், இதனால் விமானத் துறை நஷ்டத்தை
சந்தித்து வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2020-ஆம் ஆண்டு விமான
(திருத்த) மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த பூரி, ஒவ்வொரு நாளும் ரூ.26 கோடி
இழப்பை சந்தித்து வரும் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா, பல வழித்தடங்களில்
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. என்றபோதிலும் ஏர் இந்தியாவின் 50
சர்வதேச மற்றும் 80 உள்நாட்டு விமானங்களை சேவையினை தொடரந்து செய்து வருவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச விமானப் போக்குவரத்து
சங்கத்தின் (IATA) புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய அமைச்சர், விமானத் துறை 63
பில்லியன் டாலர் முதல் 113 பில்லியன் டாலர் வரை இழப்பை சந்திக்க நேரிடும் என
தெரிவித்தார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "உள்நாட்டு (விமான) பயணம்
20-30 சதவீதம் குறைந்துள்ளது என்பது எனது கவலை" என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தகைய சந்தர்ப்பத்தில், விமான
போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பல பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. அதாவது விமான
போக்குவரத்து எரிபொருளுக்கு (ATF) எண்ணெய் நிறுவனங்கள் வழங்கிய கடன் நேரத்தை 15
நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ATF-ஐ GST வரம்பிற்குள்
கொண்டுவர வேண்டும் எனவும் அவர் விரும்பினார்.
பின்னர், இந்தியாவின் விமானப்
பாதுகாப்பு மதிப்பீடுகளை மேம்படுத்தவும், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA)
உள்ளிட்ட ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு சட்டரீதியான அந்தஸ்தை வழங்கவும்
முயற்சிக்கும் மசோதாவை இந்த மன்றம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக