Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 மார்ச், 2020

சூதாட்டம்... மனைவியைப் பழிவாங்க, 3 மகள்களை ஏரியில் தள்ளிவிட்டு கொலை!



சூதாடப் பணம் கொடுக்க மறுத்த மனைவியைப் பழிவாங்க, மூன்று மகள்களை ஏரியில் தள்ளி கொலை செய்த தந்தை.

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள தாட்கோலி கிராமத்தைச் சேர்ந்தவர் பயாஸ். மனைவியுடன் வசித்து வரும் பயாஸ் தம்பதிக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பு நடத்திவரும் பயாஸ், சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு சூதாடுவதற்குப் பணம் தேவை என்று கேட்டு மனைவியை பயாஸ் நச்சரித்தார்.

ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கி காணப்பட்ட இந்த குடும்பம், வறுமை காரணமாகக் கணவனுக்குப் பணம் கொடுக்க அவருடைய மனைவி மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பயாஸ் மனைவியைப் பழிவாங்கத் திட்டம் போட்டு நேற்று இரவு முழுவதும் காத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10 வயது மகள் அப்பியா, ஒன்பது வயது மகள் மஹீம், 7 வயது மகள் ஷோயா ஆகியோரை ஊரில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்ற பயாஸ் மூன்று பேரையும் தண்ணீர் நிரம்பி இருக்கும் ஏரியில் தூக்கிப்போட்டு படுகொலை செய்தார்.

மதியம்வரை மகன்களையும் கணவனையும் காணாமல் தவித்த பயாஸ் மனைவி அவர்களைத் தேடிப் பார்த்தபோது கணவன் செய்த கொடூரச் செயல் தெரியவந்தது. போலீஸாருக்கு தகவல் அளித்த உள்ளூர் மக்கள் ஏரியில் தூக்கி வீசி தந்தையால் படுகொலை செய்யப்பட்ட 3 பெண் குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர்.

விரைந்து வந்த போலீசார் தந்தையார் படுகொலை செய்யப்பட்ட பெண் குழந்தைகள் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துத் தலைமறைவாக இருக்கும் பயாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக