ஹுவாய் நிறுவனம் போலந்து நாட்டில் அசத்தலான
ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போன் மாடல் அருமையான சிறப்பம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது, மேலும்
விரைவில் அனைத்து இடங்களிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுவாய்
பி40 லைட் இ
ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போன் ஆனது
6.39-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720X1560
பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த
சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
64ஜிபி
உள்ளடக்க மெமரி வசதி
ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போனில்
4ஜபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் கருப்பு, நீலம்
போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
48எம்பி
பிரைமரி லென்ஸ்
ஹுவாய் பி40 லைட் இ சாதனத்தின்
பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்களி லென்ஸ் + 2எம்பி
டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ
கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.
ஹைசிலிகான்
கிரிண் 710எப் சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் ஹைசிலிகான் கிரிண்
710எப் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.
4000எம்ஏஎச்
பேட்டரி
ஹுவாய் பி40 லைட் இ ஸ்மார்ட்போனில்
4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,
மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் அதிவேக செயல் திறனை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான சாதனம்.
176கிராம்
எடை
ஹுவாய் பி40 லைட் இ சாதனத்தில்
புளூடூத் 5, ஜி.பி.எஸ், ஏ.ஜி.பி.எஸ், குளோனாஸ், மைக்ரோ யு.எஸ்.பி மற்றும்
3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும்
176கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
ஹுவாய்
பி40 லைட் இ சாதனத்தின் விலை
ஹுவாய் பி40 லைட் இ சாதனத்தின் விலை
மற்றும் விற்பனை போன்ற தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை, இருந்தபோதிலும்
பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக