Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 மார்ச், 2020

நாளை விற்பனைக்கு வரும் சியோமியின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.! என்ன விலை? என்னென்ன சிறப்பம்சங்கள்.!



மி டிவி 4எக்ஸ்

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக மற்ற நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை விட சியோமியின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மி டிவி 4எக்ஸ்
இந்நிலையில் நாளை(மார்ச் 11) சியோமி தனது மி டிவி 4எக்ஸ்(Xiaomi Mi TV 4X)ஸ்மார்ட் டிவி
மாடலை பிளிப்கார்ட் வழியே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
3840 x 2160 பிக்சல்
நாளை வெளிவரும் இந்த 43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது 4கே யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9பை
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்க்கு அதிக கவனம்
செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் ஆதரவு இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் சாதனத்தில் 64-பிட் குவாட்-கோர் ஏ-53 ஆதரவு இடம்பெற்றுள்ளது, மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவரும்.


க்ரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டன்ட்
மேலும் க்ரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டன்ட், ஃபைல் மேனேஜர், பிளே மூவிஸ், மீடியா பிளேயர், டிவி மேனேஜர், லைவ் டிவி ஆப், டிவி Guide ஆப், எச்.265, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.
பேட்ச்வால் யுஐ -டேட்டா சேவர்
43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் பேட்ச்வால் யுஐ உடன் ஆண்ட்ராய்டு 9பை வசதியுடன் இயக்கப்படுகிறது, மேலும் டேட்டா சேவர் என்ற புதிய அம்சத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்,அதன்படி ஒவ்வொரு ஆப் பயன்பாட்டிலும் பயனர்கள் தங்கள் டேட்டா பயன்பாட்டைக் காண அனுமதிக்கும் உள்ளமைக்கப்பட்ட டேட்டா கவுண்ட்டர் உள்ளது.
DTS-HD ஆடியோ ஆதரவு
அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி டிவி 4எக்ஸ் மாடல். பின்பு இந்த 43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி மற்றும் DTS-HD ஆடியோ ஆதரவு மற்றும் 20வாட் ஸ்பீக்கர் வசதியும் உள்ளது.
இணைப்பு ஆதரவுகள்
மி டிவி 4எக்ஸ் சாதனத்தில் எச்டிஎம் போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக்,புளூடூத் 4.2, வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ரிமோட் கூட மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் விலை
நாளை விற்பனைக்கு வரும் இந்த 43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் 10சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் கேஷ்பேக் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக