பெரும்பாலான நகரங்களில் 100Mbps இணைய சேவை
வேகத்தை வழங்குவதற்காக பிராட்பேண்ட் சேவை ஆபரேட்டர் Hathway பிரபலம்
பெற்றவை. இந்நிலையில் தற்போது வெறும் 499 ரூபாய்க்கு தனது சிறப்பம்சத்தை
மக்களுக்கு அளித்திட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பெரும்பானை நகரங்களில் இந்நிறுவனம்
100Mbps இணைய வேகம் அளித்துவந்த போதிலும், சில தேர்தெடுக்கப்பட்ட நகரங்களில்
300Mbps வேகத்தை நிரூபிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைய்
தற்போது இந்த நிறுவனம் ஹைதராபாத்தில் 100Mbps திட்டத்தை ரூ.499/மாதம் -க்கு அளிக்க
திட்டமிட்டுள்ளது.
Hathway Freedom திட்டத்தை 12
மாதங்களுக்கு ரூ.5988-க்கு அளிக்கும் இந்நிறுவனம் (அதாவது மாதத்திற்கு 499 ரூபாய்)
இந்த கட்டணத்துடன் கூடுதல் வரிகளையும் வசூளிக்கிறது. அதாவது, கூறப்பட்ட விலையை விட
இந்த திட்டத்தின் விலை சற்று கூடுதலாக போகலாம்.
மேலும், இந்நிறுவனம் Hathway Freedom
திட்டத்தை வரம்பற்ற தரவு விருப்பத்துடன் வழங்குகிறது, இருப்பினும், ACT பைபர்நெட்
போன்ற பிற போட்டியாளர்களும் தங்கள் இணையத் திட்டங்களில் FUP வரம்பைக்
கொண்டுள்ளனர். அறிக்கைகளின்படி, ஹாத்வே அதன் போட்டியாளரான பிரபல இணைய சேவை
வழங்குநர் ஜியோ பைபர், ஆக்ட் பைபர்நெட், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் நிறுவனங்களுக்கு
ஹைதராபாத்தில் கடுமையான போட்டியை அளித்து வருகிறது.
குறைந்தபட்ச அலைவரிசை வேகமான 25Mbps
மற்றும் அதிகபட்ச 125Mbps வேகத்துடன் மலிவு கட்டண திட்டங்களை ஹாத்வே வழங்குகிறது.
இதனிடையே தற்போது Hathway Freedom திட்டம் 100Mbps பிராட்பேண்ட் வேகத்துடன்
வருகிறது, இதன் விலை ரூ.599-க்கு (ஒரு சந்தாதாரர் மாதாந்திர அடிப்படையில்
திட்டத்தை எடுக்க விரும்பினால்) அளிக்கிறது.
ஒருவேளை இதே திட்டத்தை பயனர்கள் ஆறு
மாதங்களுக்கு தேர்வு செய்தால், திட்டத்தின் செலவு 3,294 + வரி என்ற அடிப்படையில்
(அதாவது மாதத்திற்கு 549 ரூபாய்) அளிக்கிறது. அதேப்போல் இந்த திட்டத்தை பயனர்கள்
12 மாதத்திற்கு எடுக்க விரும்பினால் ரூ.5,988+ வரி வசூளிக்கப்படுகிறது (அதாவது
மாதம் 499 ரூபாய்). மேலும் ஹைதராபாத்தில் எந்த வரம்பும் இல்லாமல் வரம்பற்ற
தரவுகளுடன் இது வருகிறது என்பது ஹாத்வே இணையத் திட்டங்களின் நன்மை.
அதேவேளையில் நிறுவனம் 125Mbps
திட்டத்தையும், ஹாத்வே தண்டர் (Hathway Thunder) திட்டம் என்றும் வழங்குகிறது.
பயனர் ஒரு மாத, அரை ஆண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் முறையே ரூ.649, ரூ.3,594
மற்றும் ரூ.6,588 என்ற விலைகளில் பெறாலம். இந்த திட்டத்திற்கு சந்தாதாரர்கள் ஆண்டு
கட்டணத் திட்டத்தைத் தேர்வுசெய்தால் மாதத்திற்கு 549 ரூபாய் வசூளிக்கப்டும் என்பது
குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த திட்டங்கள் யாவும் முதல்
முறையாக Hathway பிராட்பேண்டில் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
பொறுந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக