கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில்
கன்டேஜியன் ஹாலிவுட் படத்தை மக்கள் தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்
ஆன்லைனில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக அது ஆகியுள்ளது.
கன்டேஜியன்
ஸ்டீவன் சோடர்பர்க் இயக்கத்தில் ஜூட் லா,
கேட் வின்ஸ்லெட், மேட் டாமன், க்வெய்னத் பால்ட்ரோ உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த
2011ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் கன்டேஜியன். அந்த படத்தில் ஹாங்காங்கில் இருந்து
ஒரு வைரஸ் பரவி உலகம் முழுவதும் 26 மில்லியன் பேர் உயிர் இழப்பார்கள். தும்மல், இருமல்
மூலம் அந்த வைரஸ் அடுத்தவர்களுக்கு பரவுவது போன்று காட்டியிருந்தார்கள்.
கொரோனா
படத்தில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்
தனிமைப்படுத்தப்பட்டனர். அதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்குள் பல உயிர்கள் போய்விட்டன.
கன்டேஜியன் படத்தை பார்த்தால் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவது தான் நினைவுக்கு வருகிறது.
கொரோனாவும் சீனாவில் இருந்து துவங்கி உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா
வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும்
பணி நடந்து கொண்டிருக்கிறது
படம்
கன்டேஜியன் படம் தற்போதைய சூழலை நினைவூட்டுவதால்
மக்கள் அந்த படத்தை தேடித் தேடி ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹாரி பாட்டர்
படங்களுக்கு பிறகு கன்டேஜியனுக்கு தான் அதிக கிராக்கி இருப்பதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கன்டேஜியன் படத்திலும் அந்த வைரஸ் பாதிப்பு சூழலை பான்டமிக்
என்று அறிவித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு இல்லை
கன்டேஜியன் படத்திற்கு திரைக்கதை எழுதிய
ஸ்காட் பர்ன்ஸ் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பற்றிய பயத்தால் தான் மக்கள் எங்கள்
படத்தை பார்க்கிறார்கள். கன்டேஜியனுக்கும், கொரோனாவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை
என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவ, அதை பற்றிய வதந்திகள் மறுபக்கம்
வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக