கடந்த 92 நாட்களில் மட்டும் ரூ.128 கோடி
திருட்டு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தெந்த வகையில் அதேபோல் எந்த
கருவிகள் பிரதாணமாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
உலகம்
பூராவும் பரவிக் கிடக்கும் ஹேக்கர்கள்
ஹேக்கர்கள் இன்று உலகம் பூராவும்
பரவிக் கிடக்கின்றனர். அவர்கள் புது புது பாணிகளை கையாண்டு வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாத விடயமாக இருக்கின்றது. இவர்கள் கணக்கில் பணம்
போனதே தெரியாதபடி பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
பாதுகாப்பு
கவசங்களை முறியடிக்கும் ஹேக்கர்கள்
ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பாக
பரிவர்த்தனை செய்வதற்கு செயலிகள் தங்களது பாதுகாப்பு கட்டமைப்பை வகுத்தாலும் அதை
முறியடிக்கும் வித்தையை ஹேக்கர்கள் கையாண்டு கொண்டே இருக்கின்றனர்.
ஸ்கிம்மர்
கருவி மூலம் திருட்டு
ஸ்கிம்மர் கருவி என்பது டேட்டாக்களை
திருடும் ஒரு கருவி ஆகும். ஏடிம் மெஷினில் நாம் ஏடிஎம் கார்டை சொருகும் இடத்தில்
அதை பொருத்தி விடுவார்கள். அது மெஷினோடு பொருந்தி பார்வைக்கு மாற்றம் எதுவும்
இல்லாமல் இருக்கும்.
அனைத்து
தகவல்களையும் கறந்துவிடும்
ஆனால் ஒருவர் ஏடிஎம் கார்டை சொருகிய
உடனேயே அது அனைத்து தகவல்களையும் கறந்துவிடும். வாடிக்கையாளர் சென்றவுடன்
அந்தக்கருவியை பொருத்திய நபர் எடுத்துக்கொள்வார், அதிலிருந்து போலி ஏடிஎம் கார்டை
தயாரித்து வேறு மாநிலத்தில் பணத்தை திருடுவார்கள்.
நொடியில்
உங்கள் டேட்டாவை திருடிவிடும்
நொடியில் உங்கள் டேட்டாவை ஸ்கிம்மர்
திருடி விடும் கார்டை நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள்
சிறிது தூரத்தில் அமர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க
உங்கள் ஏடிஎம் கார்டை நுழைக்கும் போது நொடியில் உங்கள் டேட்டாவை அந்த ஸ்கிம்மர்
மெஷின் திருடி விடும். உங்கள் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் உங்களுக்கான ஏடிஎம்
ரகசிய குறியீடுகளை அது எடுத்துவிடும்.
பின்
நம்பரை கவனிக்க வைஃபை வசதி
நீங்கள் சென்றவுடன் பணம் எடுக்க வருவது
போல் அந்த நபர் ஸ்கிம்மர் மெஷினை எடுத்து ஒரு மணி நேரத்தில் உங்கள் டேட்டாவுடன்
கூடிய கார்டை தயாரித்து உங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதற்கு உங்கள் பின்
நம்பரை கவனிக்க வைஃபை வசதியுடன் கூடிய கேமராவையும் பொருத்தியிருப்பார்கள்.
அதன்பின் உங்கள் கார்ட் விவரங்களை பயன்படுத்தி வேறு மாநிலத்தில் பணம்
எடுத்துவிடுவார்கள்.
128
கோடி மோசடிகள்
கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம்
தேதியில் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மட்டும் 128 கோடி மோசடிகள்
நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கடந்த ஆண்டு மட்டும் இறுதியில் 21
ஆயிரத்து 41 மோசடிக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
94.52%
திருட்டு ஏடிஎம், டெபிட் கார்டில்
இதுகுறித்து இந்தியன் ரிசர்வ் வங்கி
கூறுகையில், இந்த 92 நாட்களில் அதிக அளவிலான மோசடிகள் அதாவது 94.52% ஏடிஎம்
மற்றும் டெபிட் கார்டு மூலமாகவே நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் குறிப்பாக
11 ஆயிரத்து 508 மோசடிகளுள் 6 ஆயிரத்து 117 மோசடிகள் கிரெடிட் கார்டு மோசடிகளாகவே
உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் நெட் பேங்கிங் மோசடிகளும் பிரதான இடம்
பிடித்துள்ளது.
2
வருடங்களில் 547 கோடி ரூபாய்
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்
என்னவென்றால் டிசம்பர் 2019 வரையில் கணக்கிடுகையில் கடந்த 2 வருடங்களில் மட்டும்
மொத்தமாக 547 கோடி ரூபாய் மோசடிகள் நடந்துள்ளது. இந்த மோசடிகள் கிரெடிட் கார்டு,
டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம்
ஸ்கிம்மர்ஸ் எனும் சிறிய கருவி
குறிப்பாக ஏடிஎம் ஸ்கிம்மர்ஸ் எனும்
சிறிய கருவியை ஏடிஎம்மில் பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி பணத்தை
திருடுகின்றனர். இதுபோன்ற புகார்கள் வரிசையாக சைபர் கிரைம் துறையில் பதிவாகிக்
கொண்டே இருக்கின்றன.
நீங்க
அதுல சிக்காதிங்க
தற்போது உலகம் டிஜிட்டல் மையமாகிக்
கொண்டு இருக்கிறது. ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது பிரதானமான ஒன்று. எனவே அதை
தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் பாதுகாப்பாக கையாலுவது என்பது நம் கையில் தான்
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக